கல்யாண் மாணிக்கியா

திரிபுரா ராச்சியத்தின் ஆட்சியாளர்

கல்யாண் மாணிக்கியா (Kalyan Manikya) (இ. 1660) 1626 முதல் 1660 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். முகலாயப் பேரரசின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஆட்சி செய்த கல்யாண், முகலாயர்களுடன் தொடர்ச்சியான போரில் இருந்த போதிலும், ராச்சியத்தை மீட்டெடுக்க நிறைய பணிகளை செய்தார்.

கல்யாண் மாணிக்கியா
திரிபுரா இராச்சியத்தின் மன்னன்
ஆட்சிக்காலம்1626–1660
முன்னையவர்முகலாய இடைக்காலம்
பின்னையவர்கோவிந்த மாணிக்கியா
இறப்பு(1660-06-16)16 சூன் 1660[1]
மனைவிகள்[2]கலாவதி
சகராவதி
வாரிசு[3]
பெயர்கள்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைகச்சு பா
மதம்இந்து சமயம்

வரலாறு

தொகு

கல்யாண் மாணிக்கிய வம்சத்தின் ஒரு கிளையில் பிறந்தவர். இவரது தந்தை கச்சு ஃபா ககன் ஃபாவின் வழித்தோன்றல், அவர் மகா மாணிக்கியாவின் மகனாவார். [4] 1618 ஆம் ஆண்டில் முகலாயர்கள் திரிபுராவைக் கைப்பற்றிய பிறகு, யசோதர் மாணிக்கியா, ராச்சியத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு, கல்யாணுக்கு நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாததால், இவர் தனது வாரிசாக்கப்பட்டார். [5] இப்பகுதியில் ஏற்பட்ட ஒரு கொடிய தொற்றுநோய்க்குப் பிறகு முகலாயர்கள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, [6] திரிபுரி பிரபுக்கள் 1626 இல் கல்யாணை புதிய ஆட்சியாளராக நியமித்து, இவரது முந்தைய நியமனத்தை உறுதிப்படுத்தினர். [5]

இவரது ஆட்சியில், ராச்சியத்தில் ஒழுங்கை மீட்டெடுக்க விரிவாக பணியாற்றினார். நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும், இராணுவத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன. முன்பு இழந்த பிரதேசத்தை மீண்டும் கைப்பற்ற முடிந்தது. [7] காளிக்கு கோவில் கட்டியதோடு, பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக அளித்து, மத விஷயங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

போர்கள்

தொகு

தனது முன்னோடியைப் போலவே, கல்யாண் முகலாயர்களுக்கு திரை செலுத்த மறுத்துவிட்டார். இதன் விளைவாக ராச்சியத்திற்கு எதிராக மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் இவர் அதை முறியடிக்க முடிந்தது. இருப்பினும், இவர் 1658 இல் இளவரசர் ஷா ஷுஜாவால் தோற்கடிக்கப்பட்டார். திரிபுரா பின்னர் முகலாய வருவாய் பட்டியலில் "சர்க்கார் உதய்ப்பூர்" என்ற பெயரில் சேர்க்கப்பட்டது. மேலும் கல்யாண் தனது மகன் நட்சத்ர ராயை (பின்னர் சத்ர மாணிக்யா என்று அழைக்கப்பட்டார்) ஷா ஷுஜாவின் நீதிமன்றத்தில் பிணைக் கைதியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

இறப்பு

தொகு

1660 இல் இவரது மரணத்திற்குப் பிறகு, ஏற்கனவே போரினால் வலுவிழந்த திரிபுரா, கல்யாணின் மகன்களிடையே ஒரு சகோதர வாரிசு போராட்டத்திற்கு மேலும் உட்படுத்தப்பட்டது. [8]

சான்றுகள்

தொகு
  1. Goswami, D.N. (1989). The Episode of Shuja Mosque- A historical review (PDF). Proceedings of North East India History Association: Tenth session. North East India History Association. p. 123. Archived from the original (PDF) on 2020-02-26. பார்க்கப்பட்ட நாள் 2023-09-29.
  2. Sarma, Raman Mohan (1987). Political History of Tripura. Puthipatra. p. 103.
  3. (Sarma 1987, ப. 102–03)
  4. Gan-Chaudhuri, Jagadis. Tripura, the land and its people.
  5. 5.0 5.1 (Sarma 1987)
  6. Chib, Sukhdev Singh. This beautiful India: Tripura.
  7. Chib, Sukhdev Singh. This beautiful India: Tripura. Ess Ess Publications.Chib, Sukhdev Singh (1988).
  8. (Chaudhuri 1999, ப. 4)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_மாணிக்கியா&oldid=4109262" இலிருந்து மீள்விக்கப்பட்டது