இராதா கிசோர் மாணிக்கியா

(ராதா கிசோர் மாணிக்கியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாராஜா இராதா கிசோர் மாணிக்கியா (Radha Kishore Manikya) 1897 முதல் 1909 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்டமாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார் .இவர் நவீன திரிபுராவின் கட்டிடக் கலைஞர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.[1][2]

இராதா கிசோர் மாணிக்கியா தேவ வர்மன் பகதூர்
மகாராஜா
ஆட்சிக்காலம்1897–1909
முன்னையவர்வீர் சந்திர மாணிக்கியா
பின்வந்தவர்வீரேந்திர கிசோர் மாணிக்கியா
அரசமரபுமாணிக்ய வம்சம்
மதம்இந்து சமயம்

நிர்வாகம்

தொகு

இராதா கிசோர் மாணிக்கியா காவல்துறை மற்றும் வருவாய்த் துறைகளை பிரித்தெடுத்தார்.[3] 1905க்கு முன் மாநிலத்தின் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைகளின் பணிகள் காவல்துறை அதிகாரிகளாலாலேயே செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டில், காவல்துறையை வருவாய் துறையிலிருந்து இருந்து விடுவிக்கும் வகையில் காவல் துறையை முழுமையாக மறுசீரமைத்தார். அப்படிப் பிரிந்த பிறகு திரு. ஜே. சி. தத்தா என்பவர் மன்னரால் நியமிக்கப்பட்ட முதல் காவல் கண்காணிப்பாளரானார்.

கலை மற்றும் கல்வியின் புரவலர்

தொகு

அரசர் இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். தாகூர் இவரது ஆட்சிக் காலத்தில் 1900 ஆம் ஆண்டு முதன்முதலில் திரிபுராவிற்கு வந்தார். 1000 ரூபாய் ஆண்டு மானியத்துடன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திற்கு மன்னர் ஆதரவளித்தார். பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் காரணமாக மோசமான நிதிநிலையில் இருந்தபோதிலும் ஜகதீஷ் சந்திர போஸின் அறிவியல் ஆராய்ச்சிக்கு மறைமுகமாக நிதியுதவி செய்ய மன்னர் தனது மருமகளின் நகைகளை அடகு வைத்தார்.[4]

நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும்[5] இவரது காலத்தில் உஜ்ஜயந்தா அரண்மனை 1899-1901[6]காலத்தில் 10 இலட்சம் (1 மில்லியன்) ரூபாய் செலவில் கட்டப்பட்டது.[7] திரிபுரா இராச்சியத்தின் முந்தைய அரச அரண்மனை அகர்தலாவிலிருந்து 10 கிமீ (6 மை) தொலைவில் இருந்தது. இருப்பினும், 1897 இல் ஏற்பட்ட பேரழிவுகரமான பூகம்பத்தின் விளைவாக, அரண்மனை அழிக்கப்பட்டு பின்னர் அகர்தலா நகரின் மையத்தில் உஜ்ஜயந்தா அரண்மனையாக மீண்டும் கட்டப்பட்டது.[7]

அரசர் கல்வியின் புரவலராவும் இருந்தார். இவர் கைலாஷகர் நகரில் ஆர்கேஐ பள்ளியை நிறுவினார். மேலும் வங்காளதேசத்தில் விக்டோரியா கொமிலா கல்லூரியின் கட்டுமானத்திற்காக நிதி வழங்கினார். கொல்கத்தாவின் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முழு அளவிலான மருத்துவப் பிரிவு இவர் வழங்கிய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. "Leading lights among the Manikyas". tripurainfo.in. Archived from the original on 9 ஜூலை 2024. பார்க்கப்பட்ட நாள் 2 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Deb Barma, Aloy; Debroy, Prajapita (2022). Cinema as Art and Popular Culture in Tripura: An Introduction (in ஆங்கிலம்). Agartala: பழங்குடியினர் ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனம். p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-958995-0-0.
  3. "Police system in Princely state of Tripura". tripura police. Archived from the original on 12 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2012.
  4. "Tagore telegram shows special relationship with Tripura kings". The Hindu Businessline. PTI. 14 June 2011. http://www.thehindubusinessline.com/industry-and-economy/economy/article2104527.ece. பார்த்த நாள்: 2 June 2012. 
  5. Westtripura.gov.in பரணிடப்பட்டது 7 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம், retrieved on 3.6.2007
  6. Indnav.com, retrieved on 31 May 2007.
  7. 7.0 7.1 North-east-india.com பரணிடப்பட்டது 2020-02-17 at the வந்தவழி இயந்திரம், retrieved on 31 May 2007.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதா_கிசோர்_மாணிக்கியா&oldid=4109210" இலிருந்து மீள்விக்கப்பட்டது