இசுகோலியோடன்
இசுகோலியோடன் | |
---|---|
பசிபிக் மண்வெட்ட்டிச் சுறா (இசுகோலியோடன் மேக்ரோரைக்கோசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | காண்டிரிச்சிசு
|
வரிசை: | கார்சார்கினிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | இசுகோலியோடன் ஜெ. பி. முல்லர் & கென்லே, 1838
|
மாதிரி இனம் | |
இசுகோலியோடன் லேட்டிகாடசு ஜெ. பி. முல்லர் & கென்லே, 1838 | |
வேறு பெயர்கள் | |
|
இசுகோலியோடன் (Scoliodon) என்பது கார்சார்கினிடே குடும்பத்தில் உள்ள ரெக்வியாம் சுறாக்களின் பேரினமாகும்.[1] மண்வெட்டிச் சுறா (இசு. லேட்டிகாடசு) என்ற ஒற்றை இந்தோ-பசிபிக் சிற்றினத்தை மட்டுமே உள்ளடக்கியதாக முன்னர் கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய வகைப்பாட்டியல் ஆராய்ச்சி மூலம் பசிபிக் மண்வெட்டி சுறா (இசு. மேக்ரோரிஞ்சோசு) என்ற கூடுதல் சிற்றினத்தைக் கண்டறியப்பட்டுள்ளது.
இடம்
தொகுஇசுகோலியோடன் பேரினச் சுறாக்கள் முக்கியமாக இந்தோ-மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து சப்பானின் தென்பகுதி வரைக் காணப்படுகின்றன.
உயிரியல்
தொகுஇசுகோலியோடன் நீளமான, சுழல் வடிவ உடலைக் கொண்டுள்ளது. இதன் முன்பகுதி குறுகலாக உள்ளது. இது மிக வேகமாக நீந்தக்கூடியது. உடல் மற்றும் வால் பக்கவாட்டாகச் சுருக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தலை பகுதி முதுகுபுறமாகத் தட்டையாகக் காணப்படும். முழு உடலும் பிளாக்காய்டு செதில்கள் புறவன்கூடாக மூடப்பட்டிருக்கும். வாய் வயிற்றுப் பக்கத்தில் அமைந்துள்ளது. இருபுறமும் தாடைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு வரிசை ஒற்றை வடிவ அல்லது பல்லுறு பற்களைக் கொண்டுள்ளது. ஆண் இசுகோலியோடன் 33 செ.மீ. நீளம் இருக்கும்போது முதிர்ச்சியடைகின்றன. ஆனால் பெண் இசுகோலியோடன் 36 செ.மீ. நீளத்தில் முதிர்ச்சியடையும். பெரும்பாலும் முட்டையிட்டுக் குட்டி போடுபவையாக உள்ளன. இசுகோலியோடான் லேட்டிகாடேடசு கருத்தரிக்கும் போது குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சம் 19 கருக்கள் வரை இருக்கும். பிறக்கும் போது, இசுகோலியோடான் லேட்டிகாடசு தோராயமாக 13.7 நீளமுடையதாக இருக்கும்.[2] மட்டுப்படுத்தப்பட்ட கருவுறுதல் காரணமாகவும், மீன்பிடித்தல் மற்றும் வாழ்விட சீரழிவு ஆகியவற்றால் சுறாக்களின் பேரினமானது எதிர்மறையாகப் பாதிக்கப்படலாம்.
சிற்றினங்கள்
தொகுஇரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் உள்ளன.[3]
- இசுகோலியோடன் லேட்டிகாடசு ஜேபி முல்லர் & ஹென்லே, 1838 (மண்வெட்டி சுறா)
- இசுகோலியோடன் மேக்ரோரைக்கோசு பிளீக்கர், 1852 (பசிபிக் மண்வெட்டி சுறா)
மேற்கோள்கள்
தொகு- ↑ Scoliodon
- ↑ Sen, S.; Chakraborty, S. K.; Zacharia, P. U.; Dash, G.; Joe Kizhakudan, S.; Bharadiya, S. A. & Gohel, J. K. (2018). "Reproductive strategy of spadenose shark, Scoliodon laticaudus Muller and Henle, 1839 along north‐eastern Arabian Sea". Journal of Applied Ichthyology. 34 (6): 1304–1313.
- ↑ Periasamy, Rengaiyan; Chen, Xiao; Ingole, Baban; Liu, Wenai (February 2015). "Complete mitochondrial genome of the Spadenose shark Scoliodon laticuadus (Carcharhiniformes: Carcharhinidae)". Mitochondrial DNA.
https://animaldiversity.org/accounts/Scoliodon/classification/