இசுக்காண்டியம் அசிட்டைலசிட்டோனேட்டு
வேதிச் சேர்மம்
இசுக்காண்டியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Scandium acetylacetonate) என்பது Sc(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மூலக்கூற்று வாய்ப்பாட்டிலுள்ள [C5H7O2]− இசுக்காண்டியம் நேர்மின் அயனியும் அசிட்டைலசிட்டோனேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஒருங்கிணைவுச் சேர்மமான இது பென்சீனில் கரையும். எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. Sc(III) நிலையில் எண்முக மூலக்கூறு வடிவத்தை ஏற்றுள்ளது.[1] அம்மோனியாவின் முன்னிலையில் அசிட்டைலசிட்டோனுடன் இசுக்காண்டியம் நைட்ரேட்டைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் இசுக்காண்டியம் அசிட்டைலசிட்டோனேட்டு முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
திரிசு(அசிட்டைலசிட்டோனேட்டு)இசுக்காண்டியம், இசுக்காண்டியம் திரிசு(அசிட்டைலசிட்டோனேட்டு)
| |
இனங்காட்டிகள் | |
14284-94-7 நீரிலி 124302-45-0 ஒற்றைநீரேற்று | |
பண்புகள் | |
C15H21O6Sc | |
வாய்ப்பாட்டு எடை | 342.28 g·mol−1 |
தோற்றம் | white solid |
அடர்த்தி | 1.385 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 187 பதங்கமாகும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Anderson, Thomas J.; Neuman, Melvin A.; Melson, Gordon A. (1973). "Coordination Chemistry of Scandium. V. Crystal and Molecular Structure of tris(Acetylacetonato)scandium(III)". Inorganic Chemistry 12 (4): 927–930. doi:10.1021/ic50122a046.
- ↑ Morgan, Gilbert T.; Moss, Henry Webster (1914). "XXIV.—Researches on Residual Affinity and Co-ordination. Part I. Metallic Acetylacetones and Their Absorption Spectra". J. Chem. Soc., Trans 105: 189–201. doi:10.1039/CT9140500189. https://zenodo.org/record/1512382.