இசுக்காண்டியம் பன்னிருபோரைடு
இசுக்காண்டியம் பன்னிருபோரைடு (Scandium dodecaboride) என்பது ScB12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அனல்தாங்கும் உலோக போரைடு ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம் டோடெக்காபோரைடு
| |
பண்புகள் | |
ScB12 | |
வாய்ப்பாட்டு எடை | 174.69 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகம், tI26 |
புறவெளித் தொகுதி | I4/mmm, No. 139 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்புமுறை தயாரிப்பு
தொகு7:1 என்ற விகிதத்தில் போரான் தூள் மற்றும் இசுக்காண்டியம் தூள் இரண்டையும் சேர்த்து 2500 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு பிளாசுமா தீவட்டி அல்லது அதற்கு இணையான அமைப்பால் சூடுபடுத்தி பின்னர் குளிர் நீரால் வெப்பம் தணித்து அடர் ஐதரோ குளோரிக் அமிலத்தால் கழுவி இசுக்காண்டியம் பன்னிருபோரைடைத் தயாரிக்கலாம்.[1]
படிகவியல்
தொகுமுதன் முதலில் ScB12 கனசதுரப் படிக அமைப்பில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டது[2]. பின்னர் நடைபெற்ற ஆய்வுகள் இச்சேர்மம் நான்முக வடிவம் கொண்டிருப்பதாக தெரிவித்தன. ( ஓர் அலகுக்கூட்டில் a = 522 பைக்கோ மீட்டர் c = 735 பைக்கோ மீட்டர்)[1] மிகச் சமீபத்திய ஆய்வுகளில் இசுக்காண்டியம் பன்னிருபோரடைடு உண்மையில் கனசதுர படிக அமைப்பிலுள்ளது என்றும் ஆனால் இதற்கு நிலைப்புத்தன்மை தேவை என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Matkovich, V.I.; J Economy; R F Giese Jr; R Barrett (1965). "The structure of metallic dodecaborides". Acta Cryst. 19 (6): 1056–1058. doi:10.1107/S0365110X65004954. http://journals.iucr.org/q/issues/1965/12/00/a04941/a04941.pdf. பார்த்த நாள்: 2008-08-28.
- ↑ Przybylska, Maria; Allan H. Reddoch; George J. Ritter (1963). "The Preparation and Structure of Lutetium Diboride, Scandium Dodecaboride and Lutetium Antimonide". J. Am. Chem. Soc 85 (4): 407–411. doi:10.1021/ja00887a008.
- ↑ Paderno, Y.; N. Shitsevalova (1995). "Stabilization of cubic scandium dodecaboride". Journal of Alloys and Compounds 219 (1–2): 119–123. doi:10.1016/0925-8388(94)05048-1.