இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு
இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு (Scandium perrhenate) என்பது Sc(ReO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இதன் வெப்ப நிலைப்புத்தன்மை தொடர்புடைய இட்ரியம் மற்றும் இலந்தனம் பெர்யிரேனேட்டு சேர்மங்களை விட குறைவாக உள்ளது.[2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு(VI)
| |
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம்(III) பெர்யிரேனேட்டு
இசுக்காண்டியம்(III) பெர்யிரேனேட்டு(VI) | |
இனங்காட்டிகள் | |
86498-49-9 200715-49-7 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Sc(ReO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 795.577 (நீரிலி) 813.593 (ஒற்றைநீரேற்று) 849.625 (முந்நீரேற்று) |
உருகுநிலை | 735°C[1] |
நன்றாகக் கரையும் | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இசுக்காண்டியம் நைட்ரேட்டு இசுக்காண்டியம் பெர்குளோரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இட்ரியம் பெர்யிரேனேட்டு இலந்தனம் பெர்யிரேனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு மற்றும் பண்புகள்
தொகுஇசுக்காண்டியம்(III) ஆக்சைடுடன் பெர்யிரேனிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டுச் சேர்மத்தை தயாரிக்க இயலும்.[1] கரைசலில் இருந்து இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு முந்நீரேற்று வீழ்படிவாகிறது. இது 50 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் மூலக்கூற்றை இழந்து Sc(ReO4)3·H2O என்ற சேர்மம் உருவாகிறது. நீரற்ற வடிவத்தை 140 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் உருவாகும். இசுக்காண்டியம் ஆக்சைடும் இரேனியம்(VII) ஆக்சைடும் 550 °செல்சியசு வெப்பநிலையில் உருவாகின்றன.[4]
P1 இடக்குழுவில் a=7.333, b=7.985, c=20.825 Å; α=93.35, β=92.20, γ=97.42° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் முச்சரிவச்சுப் படிகத் திட்டத்தில் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு படிகமாகிறது. [5]
நீரிலுள்ள அமோனியம் பெர்யிரேனேட்டுடன் இசுக்காண்டியம் பெர்யிரேனேட்டு சேர்ந்து படிகமாகும் போது NH4Sc(ReO4)4·4H2O.[6] உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Yi, Xianwu; et al. Series of Inorganic Chemistry - Vol 7. Scandium; Rare Earth Elements. Science Press. pp. 57. 3.9.6 Manganates and Rhenates of Scandium. (in Chinese)
- ↑ Ovchinnikov, K. V.; Nikolaev, E. N.; Semenov, G. A. Mass-spectrometric study of the in vacuo thermal decomposition of scandium, yttrium, and lanthanum perrhenates(in உருசிய மொழி). Zhurnal Obshchei Khimii, 1983. 53 (5): 966-968. ISSN: 0044-460X.
- ↑ "ВАЛЕНТИНА МИХАЙЛОВНА БЕРЕСТОВИЦКАЯ (1940-2017)". Журнал Общей Химии 90 (8): 1151–1152. 2020-08-01. doi:10.31857/s0044460x20080016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-460X. http://dx.doi.org/10.31857/s0044460x20080016.
- ↑ Komissarova, L. N.; Varfolomeev, M. B.; Ivanov, V. I.; Plyushchev, V. E. Preparation and properties of scandium perrhenates(in உருசிய மொழி). Doklady Akademii Nauk SSSR, 1965. 160 (3): 608-611. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3264.
- ↑ Khrustalev, V. N.; Varkholomeev, M. B.; Struchkov, Yu. T. Crystal structure of scandium perrhenate trihydrate(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1997. 42 (11): 1779-1784. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
- ↑ Khrustalev, V. N.; Varfolomeev, M. B.; Shamrai, N. B.; Struchkov, Yu. T. Synthesis and crystal structure of double ammonium indium and ammonium scandium perrhenate tetrahydrates(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1996. 41 (4): 549-553. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.