இசுக்காண்டியம் மூவயோடைடு

இசுக்காண்டியம் மூவயோடைடு (Scandium triiodide) என்பது ScI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் அயோடைடு என்றும் அழைக்கப்படும் இச்சேர்மம் இலந்தனைடு அயோடைடு என்ற வகையில் வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் நிறத்தில்[1] காணப்படும் இச்சேர்மம் இதனையொத்த சீசியம் அயோடைடு போன்ற சேர்மங்களுடன் சேர்க்கப்பட்டு ஆலைடு விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் புற ஊதா உமிழ்வு அதிகரிக்கவும் விளக்குகளின் நீடித்த வாழ்வுக்கும் இது வழிவகுக்கிறது. அதிகரிக்கப்பட்ட புற ஊதா உமிழ்வு எல்லைகளை இசைவித்து ஒளியியமுனைவாக்கத்தை முன்னெடுக்க முடியும்[2].

இசுக்காண்டியம் மூவயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம் டிரை அயோடைடு
வேறு பெயர்கள்
இசுக்காண்டியம் அயோடைடு
இனங்காட்டிகள்
14474-33-0 Y
பண்புகள்
I3Sc
வாய்ப்பாட்டு எடை 576.65
தோற்றம் மஞ்சள்நிறத் திண்மம்
உருகுநிலை 920 °C (1,690 °F; 1,190 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரும்பு முக்குளோரைடின் (FeCl3) அமைப்பையே இசுக்காண்டியம் மூவயோடைடும் ஏற்று, செஞ்சாய்சதுர அணிக்கோவையில் படிகமாகியுள்ளது. இசுக்காண்டியத்தின் அணைவு எண் 6 ஆகவும் அதேநேரத்தில் அயோடினின் அணைவு எண் 3 ஆகவும் கொண்டு முக்கோணப் பட்டைக்கூம்பு வடிவுடன் காணப்படுகிறது[3].

இசுக்காண்டியம் மற்றும் அயோடின் நேரடியாக வினைபுரிவதால் தூய்மையான இசுக்காண்டியம் மூவயோடைடு உருவாகிறது.:[1]

2 Sc + 3 I2 → 2 ScI3

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Haeberle, N., 1973, Preparation of highly pure lanthanide iodides, Technisch-Wissenschaftliche Abhandlungen der Osram-Gesellschaft, v. 11, p. 285
  2. Brabham, D.E., Metal halide lamp for curing adhesives. U.S. Patent 6,888,312, March 1, 2011
  3. Men'kov, A. A., Komissarova, L. N., 1964, X-ray study of scandium iodide, Zhurnal Neorganicheskoi Khimii, v. 9, p. 766

உசாத்துணை தொகு

  • Tomasz Mioduski, Cezary Gumiski, and Dewen Zeng "Rare Earth Metal Iodides and Bromides in Water and Aqueous Systems. Part 1. Iodides" Journal of Physical and Chemical Reference Data 2012, vol. 41, 013104-1 to 013104-63. எஆசு:10.1063/1.3682093