இசுக்காண்டோசீன்
இசுக்காண்டோசீன் (Scandocene) என்பது Sc(C5H5)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். கரிம இசுக்காண்டியம் சேர்மமான இது வைக்கோல் நிறத்தில் படிகமாகக் காணப்படுகிறது.[1] டெட்ரா ஐதரோபியூரானில் உள்ள சோடியம் வளையபெண்டாடையீனைடையும் நீரற்ற இசுக்காண்டியம்(III) குளோரைடையும் ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இசுக்காண்டோசீன் சேர்மத்தை தயாரிக்கலாம். இசுக்காண்டியம்(III) புளோரைடும் மக்னசோசீனும் மூலப்பொருளாக வினைபுரிந்தால், இசுக்காண்டியம்(III) புளோரைடும் இசுக்காண்டோசீனும் கலந்த கலவை உருவாகிறது.[2] இது தண்ணீருடன் சேர்க்கப்பட்டால் சிதைவு வினை நிகழ்ந்து வளையபெண்டாடையீனும் இசுக்காண்டியம்(III) ஐதராக்சைடும் உருவாகின்றன..[1]
இனங்காட்டிகள் | |
---|---|
1298-54-0 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C15H15Sc | |
வாய்ப்பாட்டு எடை | 240.24 g·mol−1 |
உருகுநிலை | 240 °C (513 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 G. Wilkinson, J. M. Birmingham (Dec 1954). "CYCLOPENTADIENYL COMPOUNDS OF Sc, Y, La, Ce AND SOME LANTHANIDE ELEMENTS" (in en). Journal of the American Chemical Society 76 (23): 6210. doi:10.1021/ja01652a114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01652a114. பார்த்த நாள்: 2020-12-09.
- ↑ Frank Bottomley, Daniel E. Paez, Peter S. White (Aug 1985). "The reaction of scandium trifluoride with cyclopentadienyl salts and the crystal and molecular structure of the trimer of fluorodicyclopentadienylscandium" (in en). Journal of Organometallic Chemistry 291 (1): 35–41. doi:10.1016/0022-328X(85)80200-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022328X8580200X. பார்த்த நாள்: 2020-12-09.