இசுமிருதி முந்த்ரா

இந்திய திரைப்பட தயாரிப்பாளர்

இசுமிருதி முந்த்ரா (Smriti Mundhra) என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவரது தயாரிப்பு நிறுவனமான, மெரால்டா பிலிம்ஸ் நிறுவனமானது ஆவணப்படங்கள், அபுனைவு உள்ளடக்கப் படங்களை தயாரிப்பலில் நிபுணத்துவம் பெற்றது.

இசுமிருதி முந்த்ரா
பிறப்புலாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
கல்விகொலம்பியா பல்கலைக்கழக கலைப் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், நார்த்ரிட்ஜ்
பணி
  • இயக்குநர்
  • தயாரிப்பாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • செயின்ட் லூயிஸ் சூப்பர்மேன்
  • எ சூட்டபுள் கேள்
  • இந்திய மேட்ச்மேக்கிங்
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டியன் மகல்கேஸ்

முந்த்ரா 2017 திரிபெகா திரைப்பட விழாவில் ஆல்பர்ட் மேஸ்லெஸ் புதிய ஆவணப்பட இயக்குநர் விருதை தனது முதல் ஆவணப்படமான எ சூடபிள் கேர்ள் படத்திற்கு இவரது இணை இயக்குனரான சரிதா குரானாவுடன் இணைந்து பெற்றார்.[1][2] முந்த்ரா, நெட்ஃபிளிக்ஸின் அசல் உண்மைநிலை தொலைக்காட்சித் தொடரான இந்தியன் மேட்ச்மேக்கிங்கின் நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் உருவாக்குநர் ஆவார்.

2020 ஆம் ஆண்டில், அவர் செயின்ட் லூயிஸ் சூப்பர்மேன் (2019) ஆவணப்படத்திற்காக சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

வரலாறு

தொகு

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

தொகு

முந்த்ரா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தார். மேலும் இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வளர்ந்தார். இவரது தந்தை ஜக் முந்த்ராவும் ஒரு திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் பிறப்பதற்கு முன்பு, இவரது பெற்றோர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கல்வர் சிட்டியில் ஒரு திரையரங்கை வாடகைக்கு எடுத்து அமெரிக்காவில் இந்திய படங்களை முதல் காட்சியாக திரையிட்டு வந்தனர்.[3]

முந்த்ரா , கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், நார்த்ரிட்ஜ் இல் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2010 இல் கொலம்பியா பல்கலைக்கழக கலைக் கல்லூரியில் திரைப்படத்தில் முதுகலை நுண்கலை (MFA) பட்டம் பெற்றார்.[4] பின்னர், முந்த்ரா தான் ஆவணப்பட இயக்குநராக அறிமுகமான படமான எ சூட்டபுல் கேள் படத்தின் தயாரிப்பைத் தொடங்க மும்பை சென்றார்.

தொழில்

தொகு

முந்த்ரா தனது பதின்ம வயதிலேயே திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார்.[5] இவர் கோயன் பிரதர்சின் ' த மேன் ஹூ வாஸ் நாட் தெர் மற்றும் ஓ பிரதர், வேர் ஆர் யூ?, ஸ்பைக் ஜோன்சின் பீயிங் ஜான் மல்கோவிச் போன்ற படங்களில் தயாரிப்பு செயலாளராக பணியாற்றினார். மேலும் நீல் லாபுட்டின் நர்ஸ் பெட்டி படத்தில் தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றினார்.[6]

பின்னர், அவர் மார்க் வெப்பர் நடித்த பாம்ப் த சிஸ்டம் படத்தைத் தயாரித்தார்.[7] அது இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[8] 2005 ஆம் ஆண்டில், இவர் <i id="mwRQ">வாட்டர்போர்ன்</i> படத்தைத் தயாரித்தார். அந்த ஆண்டு எஸ்.எக்ஸ்.எஸ்.டபிள்யூ திரைப்பட விழாவில் வாட்டர்போர்ன் சிறப்பு பார்வையாளர் விருதைப் பெற்றது.[9] வாட்டர்போர்னுக்குப் பிறகு, முந்த்ரா தனுஜ் சோப்ராவின் பஞ்சிங் அட் தி சன் படத்தைத் தயாரித்தார். 2006 ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழாவில், சன் திரைப்பட விழாலில் பஞ்ச்சிங் அட் தி சன் திரையிடப்பட்டது, இது திரிபெகா திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ தேர்வாக இருந்தது. மேலும் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச ஆசிய அமெரிக்க திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி பரிசைப் பெற்றது.[10]

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே, முந்த்ரா, சக கொலம்பியா மன்னாள் மாணவியான சரிதா குரானாவுடன் சேர்ந்து, ஒரு சூட்டபுள் கேள் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க மும்பை சென்றார். இந்தத் திரைப்படம் 2017 இல் திரிபெகா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது [11][12]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

முந்த்ரா எம்மியில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைக்கதை எழுத்தாளரான கிறிஸ்டியன் மாகல்ஹேஸை மணந்தார். இவர்கள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார்கள்.[13][14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directors use film to speak on social issues at 2017 Tribeca Film Festival". NBC News (in ஆங்கிலம்). 19 April 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  2. "Award-Winning Desi Directors Tackle Arranged Marriage Stigma in 'A Suitable Girl'". www.colorlines.com (in ஆங்கிலம்). 28 April 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  3. Lim, Woojin (15 July 2020). "Storytelling Without a Script: Interview with Smriti Mundhra". Harvard Political Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  4. "Smriti Mundhra". Columbia - School of the Arts (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  5. Lim, Woojin (15 July 2020). "Storytelling Without a Script: Interview with Smriti Mundhra". Harvard Political Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  6. "Smriti Mundhra". IMDb. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  7. Rooney, David (12 May 2003). "Bomb the System". Variety (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  8. Bomb the System - IMDb, பார்க்கப்பட்ட நாள் 20 July 2020
  9. "Tribeca 2017 Women Directors: Meet Smriti Mundhra and Sarita Khurana— "A Suitable Girl"". womenandhollywood.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2020.
  10. "Punching at the Sun". Chops Films (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 21 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 20 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Heart of the Matter". The Indian Express (in ஆங்கிலம்). 27 October 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  12. "'A Suitable Girl' Doc Explores Arranged Marriage in India (Exclusive Video)". The Hollywood Reporter (in ஆங்கிலம்). 18 April 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  13. "Alumni Directed 'St. Louis Superman' Picked up by Legendary Producer Sheila Nevins and MTV". Columbia - School of the Arts (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
  14. "'A Suitable Girl' Will Challenge Everything You Thought You Knew About Arranged Marriage". Bustle (in ஆங்கிலம்). 21 April 2017. பார்க்கப்பட்ட நாள் 21 July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுமிருதி_முந்த்ரா&oldid=4162456" இலிருந்து மீள்விக்கப்பட்டது