இசை (கவிஞர்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசை (பி. 1977) என்பவர் தமிழ் கவிஞர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஆ. சத்தியமூர்த்தி. கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் வசித்து வருகிறார். அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றுகின்றார். 2000க்குப் பிறகு கவிதைகள் எழுதித் தொடங்கியவர். சமீபகாலத்தில் மிகவும் கவனம் பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார். தீம்தரிகிட, கருக்கல், உயிர்மை, காலச்சுவடு, தீராநதி உள்ளிட்ட இலக்கிய இதழ்கள் பலவற்றில் இவர் கவிதைகள் வெளியாகி உள்ளன.
இசை | |
---|---|
பிறப்பு | ஆ.சத்தியமூர்த்தி |
புனைபெயர் | இசை |
இணையதளம் | |
http://isaikarukkal.blogspot.in/ |
கவிதைத் தொகுதிகள்
தொகு- காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி 2002
- உறுமீன்களற்ற நதி 2008
- சிவாஜி கணேசனின் முத்தங்கள் 2011
- அந்தக்காலம் மலையேறிப்போனது 2014
- ஆட்டுதி அமுதே 2016
- வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் 2018[சான்று தேவை]
கட்டுரைத் தொகுப்பு
தொகு- அதனினும் இனிது அறிவினர் சேர்தல் (2013)
- லைட்டா பொறாமைப்படும் கலைஞன் 2015
- உய்யடா! உய்யடா! உய்! (2017)
- பழைய யானைக் கடை (2017)
- நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் (2019)