இச்சாசி அரபி எழுத்துமுறை
இச்சாசி அல்லது ஃகிச்சாசி எழுத்துமுறை ( அரபு மொழி: خط حجازي ḫaṭṭ ḥiǧāzī), என்பது அரபி மொழியின் பழைய எழுத்துமுறைகளுள் ஒன்று. இது அரேபியாவில் மெக்கா, மெதினா ஆகிய நகரங்கள் அடங்கிய எச்சாசு அல்லது ஃகெச்சாசுப் (Hejaz) என்னும் பகுதியில், இசுலாம் சமயம் தோற்றம் பெற்ற காலப்பகுதியில் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு) வழக்கிலிருந்த எழுத்துமுறைகளுள் ஒன்று. மற்ற அரபி எழுத்துமுறைகள் மசுக்கு (Mashq), குஃபிக்கு (Kufic) ஆகியவையாகும். நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் இச்சாசி எழுத்துமுறையில் ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட திருக்குரானின் இரண்டு பக்கங்கள் கிடைத்துள்ளன [1]
இவ்வெழுத்துமுறை மற்ற அரபு எழுத்துமுறைகளை ஒப்பிடும்பொழுது குறிப்பிட்டவகையில் கோண அமைப்புடன் இருக்கும். இதில் புள்ளிகளோ ஒட்டுக்குறிகளோ ஏதும் காணப்படுவதில்லை. மெய்யொலியைக் குறிக்கும் எழுத்துகள் மட்டுமே இருக்கின்றன.
மாயீல் (Māʾil (="சாய்வு") எழுத்து என்பது இச்சாசி எழுத்துமுறையின் அழகெழுத்து வகை ஆகும். திருக்குரானின் பழைய படிகள் இவ்வெழுத்துமுறையில் காணப்படுகின்றன. இச்சாசி என்றும் மாயில் என்றும் இரண்டு விதமாகவும் இது அழைக்கப்படுகின்றது.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- பிரித்தானிய நூலகம் MS. Or. 2165 மாயீல் எழுத்தில் எழுதிய முற்கால திருக்குரான் சுவடி, கி.பி. 7-ஆவது 8-ஆவது நூற்றாண்டு
- பிரித்தானிய நூலகம் MS. Or. 2165 (பிரித்தானிய நூலகம்)
- குவைத்தில் உள்ள தெரேக்கு இராசாப்பு அருங்காட்சியகத்தில் (Tareq Rajab Museum) உள்ள மாயீல் சுவடி பரணிடப்பட்டது 2020-10-20 at the வந்தவழி இயந்திரம்.
- சன்னாவில் உள்ள பெரும் மசூதியில் கண்டெடுக்கப்பட்ட இச்சாசி எழுத்துமுறையில் உள்ள பக்கம்
- வாத்திகனில் உள்ள வாத்திகன் நூலகத்தில் இருக்கும் மக்கான் இச்சாசி எழுத்தில் உள்ள சுவடியின் துண்டு