இச்தாக்ரி

ஈரானிய பயண எழுத்தாளர்

அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது அல்-பாரிசி அல்-இச்தாக்ரி ( Abu Ishaq Ibrahim ibn Muhammad al-Farisi al-Istakhri ) ( ஈரானின் இச்தாக்கர் என்ற நகரில் கி.பி. 957இல் பிறந்தவர் [2] 10 ஆம் நூற்றாண்டின் பயண எழுத்தாளரும் மற்றும் இசுலாமிய புவியியலாளரும் ஆவார். இசுலாமிய பொற்காலத்தின் அப்பாசியக் கலீபகத்தின் காலத்தில் தான் பார்வையிட்ட பல முஸ்லிம் பிரதேசங்களின் மதிப்புமிக்க கணக்குகளை அரபு மொழியில் எழுதினார். இவரது தோற்றம் குறித்து ஒருமித்த கருத்து இல்லை. சில ஆதாரங்கள் இவரை பாரசீகராக விவரிக்கின்றன. [3][4] மற்றவர்கள் இவர் அராபியர் என்று கூறுகின்றனர். தி என்சைக்ளோபீடியா ஈரானிக்கா “வாழ்க்கைத் தரவுகள் மிகவும் சொற்பமானவை. இவரது நெஸ்பாஸ் (பண்புப் பெயர்கள்) மூலம் இவர் பாருசிவில் உள்ள இச்தாரைப் பூர்வீகமாகக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் இவர் பாரசீகரா என்பது தெரியவில்லை” என கூறுகிறது.[5]

அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது அல்-பாரிசி அல்-இச்தாக்ரி
முழுப் பெயர்அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது அல்-பாரிசி அல்-இச்தாக்ரி
பிறப்புஇச்தாக்கர்[1]
இறப்புகி.பி. 952க்கு பிறகு[1]
பாக்தாத்[1]
Eraஇசுலாமியப் பொற்காலம்
School/traditionஅபு சையது அல்-பால்கி பள்ளி
பிரதான விருப்புஇசுலாமியப் புவியியல்
Influenced by
  • அல் பால்கி
சாலைகள் மற்றும் ராச்சியங்கள் என்ற நூலின் காணப்படும் இச்தாக்ரியின் ஒரு வரைபடம்,
பாருசு மாகாணத்தின் வரைபடம்
இச்தாக்ரியின் பாரசீக வளைகுடாவின் வரைபடம்

காற்றாலைகள் பற்றிய இச்தாக்ரியின் கணக்குதான் முதலில் அறியப்பட்டதாகும்.[6] இவர் புகழ்பெற்ற பயணி-புவியியலாளர் இப்னு அவ்கலை பயணத்தின் போது சந்தித்தார். மேலும் இப்னு அவ்கல் இவரது படைப்புகளை கிதாப் அல்-சூரத் அல்-அர்ட் என்ற தனது புத்தகத்தில் இணைத்தார்.[4][5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 வார்ப்புரு:ODB
  2. Mojtahed-Zadeh, Pirous.
  3. van Donzel, E.J., தொகுப்பாசிரியர் (1994). Islamic Desk Reference (compiled from the Encyclopedia of Islam). Brill. பக். 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9004097384. https://archive.org/details/islamicdeskrefer00donz_0/page/177. 
  4. 4.0 4.1 Miquel, André (1954–2005). "Iṣṭakhrī, Abū Isḥāḳ Ibrāhīm". in Gibb, H. A. R.; Kramers, J. H.; Lévi-Provençal, E. et al.. Encyclopaedia of Islam (2nd ). Leiden: Brill. https://referenceworks.brillonline.com/entries/encyclopaedia-of-islam-2/al-istakhri-SIM_3673?s.num=162&s.start=160.  IV:222b-223b.
  5. 5.0 5.1 Bolshakov, O. G. (1998). "Eṣṭaḵrī, Abū Esḥāq Ebrāhīm". in Yarshater, Ehsan. Encyclopædia Iranica. New York: Encyclopædia Iranica Foundation, Inc.. https://iranicaonline.org/articles/estakri-abu-eshaq-ebrahim.  VIII(6):646-647 (I have used the updated online version).
  6. J. M. Rogers (2008). The arts of Islam : treasures from the Nasser D. Khalili collection (Revised and expanded ). Abu Dhabi: Tourism Development & Investment Company (TDIC). பக். 167. இணையக் கணினி நூலக மையம்:455121277. 

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்தாக்ரி&oldid=3866953" இலிருந்து மீள்விக்கப்பட்டது