இசமா அல்லது இஜமா என்பது சமூகத்தின் ஒருமித்த கருத்து என்று பொதுவாக பொருள் தருகிறது. எனினும், 14 ம் நூற்றாண்டில் இசமா என்றால் இசுலாமிய அறிஞர்களின் அல்லது சமயப் பெரியோரின் ஒருமித்த கருத்து கருத்தாக்கத்தை உலாமா கொண்டு வந்தார்கள்.[1]

சுன்னி முஸ்லிம்களின் பார்வையில் இஜ்மா தொகு

"எனது உம்மா என்றும் தவறு செய்வதில் ஒற்று போகாது" என்ற நபிகளின் ஹதீஸ், இஜ்மாவின் அதிகாரத்தன்மையை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது[2]. குரான் மற்றும் சுன்னாவிற்கு அடுத்ததாக சுன்னி முஸ்லிம்கள் இஜ்மாவை கருதுகின்றனர்.கருத்தொற்றுமையில் இருவகை பிரிவுகள் உள்ளன, ஒன்று அணைத்து இசுலாமியர்களின் கருத்தொற்றுமை மற்றும் இசுலாத்தின் மதத்தலைவர்களின் கருத்தொற்றுமை.

நபிகளின் சகாக்களின் கருத்தொற்றுமை மற்றும் அவர்களது வழிவந்த மெதீனா நகர வாசிகளின் கருத்தொற்றுமையே மதம் சார்ந்த கருத்தொற்றுமை ஆகும் என மாலிக் பின் அனஸ் கருதியுள்ளார்[3].

மதம் சார்ந்த கருத்தொற்றுமை என்பது உலகினில் இருக்கும் அணைத்து இசுலாமியர்களின் கருத்துகளை கொண்டிருக்கவேண்டும் என்று அல்-ஷபீ கருதுவதாக மஜீத் கத்துரி கூறியுள்ளார்.[4][5]

சியாக்களின் பார்வையில் தொகு

சியக்களுக்கு இமாம்கள் இருப்பதனால், அவர்களுக்கு கருத்தொற்றுமை தேவைப்படவில்லை. [6]

மேற்கோள்கள் தொகு

  1. Ziauddin Sardar & Zafar Abbas Malik. (2001). Introduction to Silam. London: Icon Books Ltd.
  2. அல்-திர்மிதி(4:2167), இப்ன் மஜா(2:1303), அபு தாவூத் மற்றும் பலரினால் சற்று வார்த்தை மாற்றங்களுடன் உரைக்கப்பட்டவை.
  3. Muhammad Muslehuddin, "Philosophy of Islamic Law and Orientalists," Kazi Publications, 1985, p. 146
  4. Majid Khadduri, Introduction to Al-Shafi'i's al-Risala, pg.33
  5. Mansoor Moaddel, Islamic Modernism, Nationalism, and Fundamentalism: Episode and Discourse, pg. 32. சிகாகோ: University of Chicago Press, 2005.
  6. Sami Zubaida (8 July 2005). Law And Power In The Islamic World. I.B.Tauris. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85043-934-9. http://books.google.com/books?id=6EFgzjDgxOsC&pg=PA14. பார்த்த நாள்: 9 June 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜ்மா&oldid=2938481" இலிருந்து மீள்விக்கப்பட்டது