இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்

இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம் (Incheon Asiad Main Stadium) தென் கொரியாவில் இங்கியோன் நகரில் அமைந்துள்ள பன்முகப் பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். முதன்மையாக தடகளப் போட்டிகளுக்காக பயன்படுப்படவிருக்கும் இந்த விளையாட்டரங்கு 2014இல் நிகழவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முதன்மை அரங்கமாக இருக்கும். இந்த விளையாட்டரங்கு 60,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுகளுக்குப் பிறகு இதன் கொள்ளளவு 30,000 ஆகக் குறைக்கப்படும்.

இஞ்சியோன் விளையாட்டரங்கம்
ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
முழு பெயர் இஞ்சியோன் ஆசியட் முதன்மை விளையாட்டரங்கம்
இடம் இஞ்சியோன், தென் கொரியா
எழும்பச்செயல் ஆரம்பம் 25 சூன் 2011
திறவு 1 சூலை 2014
உரிமையாளர்
தரை புற்றரை
கட்டிட விலை கொரிய வன் 496 பில்லியன்
அமெரிக்க $ 429 மில்லியன்
கட்டிடக்கலைஞர் பாபுலசு[1]
குத்தகை அணி(கள்) 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
2014 ஆசிய மாற்றுத் திறனாளர் விளையாட்டுப் போட்டிகள்
அமரக்கூடிய பேர் 30,000
61,074 (2014 ஆசிய விளையாட்டுக்கள்)[2]

இந்த விளையாட்டரங்கிலேதான் ஆசிய விளையாட்டுக்களின் திறப்பு மற்றும் நிறைவு விழாக்கள், தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர்
ஹைசின்ஷா தீவு
குவாங்சோ
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
திறப்பு மற்றும் நிறைவு விழாக்கள்

2014
பின்னர்
TBD