இடங்கழி நாயனார் கோயில், கொடும்பாளூர்

இடங்கழி நாயனார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் அமைந்துள்ள கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் இடங்கழி நாயனார் என்னும் நாயனாருக்காக அமைந்துள்ள கோயிலாகும்.[1]

அடியார் தொண்டு தொகு

இடங்கழி நாயனார் கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். பல சிவன் கோயில்களை எழுப்பி சிவ வழிபாட்டினைப் போற்றியவர். சிவனடியாருக்காக நெல் திருடியவரைத் தண்டிக்காமல் நெற்களஞ்சியத்தைத் திறந்துவைத்த மன்னர் குலத்தைச் சேர்ந்தவரான இவர் நாட்டில் இருந்த சிவனடியார் ஒருவர் சிவனுக்கு மகேசுவர பூசையைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நிலையில் பொருள் இல்லாமல் போகவே, இடங்கழி நாயனாரின் அரண்மனைக்குள் புகுந்து நெல் மூட்டைகளைத் திருடினார். காரணத்தை அறிந்த மன்னர் இடங்கழியார் அந்த சிவனடியாரை விடுதலை செய்ததோடு தன் நெற்களஞ்சியத்தைத் திறந்துவிட்டு, கொள்ளையடித்துச் செல்ல முரசு அடித்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார். சிவனடியார்கள் நெல்லைக் கொண்டு செல்வதைக் கண்டு மகிழ்ந்தார். [2]

கோயில் அமைத்தல் தொகு

இவருக்காக சில ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில் கட்டப்பட்டது. தொடர்ந்து புனரமைப்பு செய்து சுற்றுச்சுவர் எழுப்பி, குரு பூசையும் செய்யப்பட்டது. [2]

செல்லும் வழி தொகு

சென்னை-மதுரை வழித்தடத்தில் விராமலிமலைக்கு தெற்கே ஆறு கி.மீ. தொலைவில் கொடும்பாளூர் உள்ளது. கொடும்பாளூர் சந்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கில் ஒரு கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. [2]

அருகிலுள்ள கோயில் தொகு

இக்கோயிலுக்கு அருகில் முசுகுந்தேஸ்வரர் கோயில் உள்ளது.

மேற்கோள்கள் தொகு