முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்

சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் (தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம்) மூவர் கோவிலுக்கு சற்று தொலைவே மேற்கே கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது.

அமைவிடம்

தொகு

இக்கோயில் இடங்கழி நாயனார் கோயிலிலிருந்து வடக்கில் செல்லும் வழியில் அமைந்துள்ளது. [1]

அடியார் தொண்டு

தொகு

இடங்கழி நாயனார் பல சிவன் கோயில்களை எழுப்பி சிவ வழிபாட்டினைப் போற்றியவர். சிவனடியாருக்காக நெல் திருடியவரைத் தண்டிக்காமல் நெற்களஞ்சியத்தைத் திறந்துவைத்த மன்னர் குலத்தைச் சேர்ந்தவரான இவர் நாட்டில் இருந்த சிவனடியார் ஒருவர் சிவனுக்கு மகேசுவர பூசையைத் தொடர்ந்து செய்து வந்தார். ஒரு நிலையில் பொருள் இல்லாமல் போகவே, இடங்கழி நாயனாரின் அரண்மனைக்குள் புகுந்து நெல் மூட்டைகளைத் திருடினார். காரணத்தை அறிந்த மன்னர் இடங்கழியார் அந்த சிவனடியாரை விடுதலை செய்ததோடு தன் நெற்களஞ்சியத்தைத் திறந்துவிட்டு, கொள்ளையடித்துச் செல்ல முரசு அடித்து நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார். சிவனடியார்கள் நெல்லைக் கொண்டு செல்வதைக் கண்டு மகிழ்ந்தார். [2]

வரலாறு

தொகு

இக்கோவிலின் எழுந்தருளியுள்ள இறைவனின் நாமம் முதுகுன்றம் உடையார் என்பதாகும். இக்கோவிலை மகிமலாய இருக்கவேள் என்கிற பராந்தக குஞ்சரமல்லன் எனும் சிற்றரசன் கி பி 921 ஆம் ஆண்டு கட்டினான். எனவே இந்தகோவிலும் தஞ்சை பெரிய கோவிலைப் போல 1000 ஆண்டு பழமையான வரலாறு கொண்ட கோவிலாகும். இக்கோவில் முழுக்க சோழர் கால கட்டிக்கலையே பின்பற்றப்பட்டுள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்

தொகு

இக்கோயில் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும். [3]

மேற்கோள்கள்

தொகு