இடியோனிக்சு கேலியேடசு
இடியோனிக்சு கேலியேடசு Idionyx galeatus | |
---|---|
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஓடனேட்டா
|
குடும்பம்: | சிந்தேமெசிடிடே
|
பேரினம்: | இடியோனிக்சு
|
இனம்: | இ. கேலியேடசு
|
இருசொற் பெயரீடு | |
இடியோனிக்சு கேலியேடசு பிரேசர், 1924 | |
வேறு பெயர்கள் | |
இடியோனிக்சு கேலியேடசு பிரேசர், 1924 |
இடியோனிக்சு கேலியேடசு (Idionyx galeatus) என்பது சின்தெமிசுடிடே குடும்பத்தில் உள்ள ஒரு தட்டாரப்பூச்சி சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு, தென் கன்னட மாவட்டம், வயநாடு மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.[2][1]
விளக்கம் மற்றும் வாழ்விடம்
தொகுஇடியோனிக்சு கேலியேடசு மரகத-பச்சை நிற கண்கள் கொண்ட நடுத்தர அளவிலான தட்டாரப்பூச்சி ஆகும். இதன் மார்பு உலோக பச்சை நிறத்தில் தங்க நிற பிரதிபலிப்புடன் இருக்கும். கைப்பட்டை இல்லை. ஆனால் சாய்ந்த சிட்ரான்-மஞ்சள் பட்டை முன்புற-பக்கவாட்டு தையல் எல்லையில் உள்ளது. மெட்டிபிமெரானின் கீழ் பின்புற எல்லையில் இதே போன்ற பட்டை காணப்படுகிறது. பக்கத்தின் அடியில் கருப்பாகவும், மஞ்சள் நிற கோடுகளுடனும் இருக்கும். வயிறு கருப்பு நிறத்துடன் காணப்படும். குத உறுப்புகள் கருப்பு நிறத்திலானது.
ஆண் இதன் குத இணைப்புகளின் வடிவத்தால் எளிதில் வேறுபடுகிறது. பெண் பூச்சியில் இந்த சிறு குமிழ் தனித்துவமான வடிவமுடையது.[3]
பிரேசர் (1936) பெரும்பாலான மாதிரிகள் காபி புதர்கள் அல்லது பெர்னி கரைகளின் எல்லைகளில் மிகவும் தாழ்வாகப் பறப்பதைக் காண முடிவதாகத் தெரிவித்தார்.[3][4] இந்த சிற்றினம் பொதுவாக நீரோடைகள் மற்றும் மலை உச்சிகளில் திறந்த காடுகளில் பறக்கிறது. இவை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் தரைக்கு அருகில் குறுகிய வட்டமடிக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kakkasery, F. (2011). "Idionyx galeata". IUCN Red List of Threatened Species 2011: e.T175163A7115903. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T175163A7115903.en. https://www.iucnredlist.org/species/175163/7115903. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ K.A., Subramanian; K.G., Emiliyamma; R., Babu; C., Radhakrishnan; S.S., Talmale (2018). Atlas of Odonata (Insecta) of the Western Ghats, India. Zoological Survey of India. pp. 262–263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788181714954.
- ↑ 3.0 3.1 3.2 C FC Lt. Fraser (1936). The Fauna of British India, including Ceylon and Burma, Odonata Vol. III. Red Lion Court, Fleet Street, London: Taylor and Francis. pp. 226-227.C FC Lt. Fraser (1936).
- ↑ C FC Lt. Fraser (1924). A Survey of the Odonate (Dragonfly) Fauna of Western India and Descriptions of Thirty New Species (PDF). pp. 517–519.