இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணை

இடைக்கால விசாரணை என்பது கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான சமயப் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகளை கடைப்பிடிப்பவர்களை கண்டறிந்து திரிபுக் கொள்கை விசாரணை அமைப்புகளால் விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவது அல்லது நாடு கடத்துவது ஆகும். முதல் திரிபுக் கொள்கை விசாரணையான எபிஸ்கோபல் விசாரணை (1184-1230) மற்றும் பின்னர் பாப்பல் விசாரணை (1230களில்) உட்பட 1184ஆம் ஆண்டிலிருந்து நடைபெறு ஒரு தொடர் விசாரணைகள் ஆகும். ரோமன் கத்தோலிக்கத்திற்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் இயக்கங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இடைக்கால விசாரணை நிறுவப்பட்டது. குறிப்பாக தெற்கு பிரான்ஸ் மற்றும் வடக்கு இத்தாலியில் உள்ள கேத்தரிசம் மற்றும் வால்டென்சியர்கள் இயக்கங்கள் மீது இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட்டது.

இதற்கு முன் பீட்டர் ஆஃப் ப்ரூயிஸ் போன்ற தனிப்பட்ட மனிதர்கள் அடிக்கடி திருச்சபைக்கு எதிராக சவால் விடுத்தனர். இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் முதல் வெகுஜன அமைப்பாக கேத்தரிச இயக்கத்தினர் திருச்சபையின் அதிகாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது ஆரம்பகால திரிபுக் கொள்கை விசாரணைகளை ஆராய்வது. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் கத்தோலிக்கத் திருச்சபை, எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை (1478-1834), போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை (1536-1821) மற்றும் உரோமைக் குற்ற விசாரணைகள் (1542-1650) நடத்தியது.

வரலாறு தொகு

விசாரணை என்பது கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான குற்றங்கள் என்று கூறப்படும் நிகழ்வுகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். திருச்சபை நீதிமன்றங்களில் அதன் பயன்பாடு முதலில் கத்தோலிக்க சமயத்திற்கு எதிரான செயல்களுக்கு மாறாக இரகசிய திருமணம் மற்றும் இருதார மணம், திருமண முறிவு, கருக்கலைப்பு போன்ற கத்தோலிக்கத்திறு எதிரான குற்றங்களைச் செய்தவர்களை மீது விசாரணை நடத்தப்பட்டது.[1]இவ்விசாரணை சமய மரபு மற்றும் கத்தோலிக்கச் சமூகத்தைப் பாதுகாப்பதற்காக திருச்சபை மற்றும் அரசு அதிகாரிகளால் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

இடம் மற்றும் முறைகளைப் பொறுத்து பல்வேறு வகையான விசாரணைகள் இருந்தது. பொதுவாக அவற்றை ஆயர் விசாரணை மற்றும் போப்பாண்டவர் விசாரணை என வகைப்படுத்தியுள்ளனர். அனைத்து முக்கிய இடைக்கால விசாரணைகளும் பரவலாக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு தீர்ப்பாயமும் சுதந்திரமாக செயல்பட்டன.[2] கத்தோலிக்க ஆட்சிப் பீடத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் விசாரணை செய்யும் அதிகாரம் இருந்தது.

ஆரம்பகால இடைக்கால விசாரணை நீதிமன்றங்கள் பொதுவாக ஜெர்மானிய நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டது. இந்த நடைமுறையில், ஒரு நபர் நீதிமன்றத்தில் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பார். எவ்வாறாயினும், சந்தேக நபர் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக சட்டரீதியான தண்டனைகளை எதிர்கொண்டனர். குற்றம் சாட்டுபவர்கள் வழக்கு நிலைத்து நிற்கும் என்பதில் உறுதியாக இருக்கும் வரை, எந்தவொரு குற்றச்சாட்டையும் செய்ய இது ஒரு ஊக்கத்தை அளித்தது.

பன்னிரண்டாம் மற்றும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ரோமானியப் பேரரசில் பயன்படுத்தப்பட்ட சட்ட நடைமுறையை நோக்கி விசாரணையில் மாற்றம் ஏற்பட்டது. ஒரு நபரின் முதல் நிலை அறிவின் அடிப்படையில் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நீதிபதிகள் சமயக் குற்ற விசாரணை மேற்கொண்டனர். விசாரணை நடைமுறைகளின் கீழ், ஒரு வழக்கின் விவரங்கள் மீதான நீதிபதியின் விசாரணை மூலம் குற்றம் செய்தவர் அல்லது குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது.

ஆயர் விசாரணைகள் தொகு

பொது மக்கள் கத்தோலிக்கததிற்கு எதிரானவர்களை சமூக விரோத அச்சுறுத்தலாகப் பார்த்தனர். இதனால் சமூக சீர்குலைவு மற்றும் அரசியல் கலவரமும் ஏற்பட்டுள்ளது.[3] 1076ஆம் ஆண்டில் காம்ப்ராய் பகுதியில் குடியிருந்தவர்களை, கேத்தரிசம் எனும் இயக்கத்தின் ஒரு கும்பல் தி வைத்து எரித்த குற்றத்திற்காக, அவர்களை போப் ஏழாம் கிரகோரி நாடு கடத்தினார்.

1184ஆம் ஆண்டில் எபிஸ்கோபல் விசாரணை மன்றத்தை போப்பாண்டவர் மூன்றாம் லூசியஸ் நிறுவினார். இது கத்தோலிக்கத்திற்கு எதிராக தெற்கு பிரான்சில் வளர்ந்து வரும் கேத்தரிசம் இயக்கத்திற்கு எதிரானாது ஆகும். இந்த விசாரணை அமைப்பை "எபிஸ்கோபல்" என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் இது உள்ளூர் ஆயர்களால் நிர்வகிக்கப்பட்டது. மேலும் கத்தோலிக்கத்திற்கு எதிரானவர்களைத் தேடி ஆயர்கள் தங்கள் மறைமாவட்டத்திற்கு ஆண்டுக்கு இரண்டு முறை வருகை தருவதைக் கட்டாயப்படுத்தியது. ஆயர் விசாரணைகளின் நடைமுறைகள் ஒரு மறைமாவட்டத்திலிருந்து, மற்றொரு மறைமாவட்டத்திற்கு மாறுபடும்.

போப்பாண்டவர் விசாரணை தொகு

போப்பாண்டவர் IX கிரிகோரி, கத்தோலிக்க சமயத்திற்கு எதிரான கொள்கையைக் கையாளும் செயல்முறைக்கு ஒழுங்கு மற்றும் சட்டப்பூர்வமான தன்மையைக் கொண்டுவருவதற்காக இவ்விசாரணை மன்ற்ததை நிறுவினார். ஆரம்பகால இடைக்காலத்தில் கத்தோலிக்க சமய நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளூர் ஆயர்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியின் சில பகுதிகளில் செயல்பட்டது மற்றும் பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிட்டத்தட்ட செயல்பாட்டை நிறுத்தியது.[4]

கத்தோலிக்க போதனைகளிலிருந்து வேறுபட்டவர்களின் நம்பிக்கைகளை விசாரிப்பதற்கும், அவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், மரபுவழிக் கோட்பாட்டில் அவர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் விதிவிலக்கான நீதிமன்றமாக போப் கிரிகோரியின் நோக்கமாக இருந்தது. கத்தோலிக்க சமூகத்தை மத துரோகிகளிடமிருந்து பாதுகாப்பது அவசியம் என்பதைக் கண்டறிந்த போப் கிரிகோரி, சந்தேக நபர்களை விசாரக்க அரசு அதிகாரிகளிடம் ஒப்படைப்பார். சில நேரங்களில் குற்றம் சாட்டப்பவர்களை எரிப்பில் வைத்து எரிப்பது வழக்கம்.மாந்திரீகம் உட்பட பல்வேறு வகையான நம்பிக்கையாளர்களை முத்திரைக் குத்தி மரண தண்டனை வரை கொடுத்தனர்.[5]

எந்த போப்பும் மதங்களுக்கு எதிரான வழக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நிறுவுவதில் வெற்றிபெறவில்லை. இடைக்கால மன்னர்கள், இளவரசர்கள், ஆயர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் மதங்களுக்கு எதிரான கொள்கையை விசாரிப்பதில் பங்கு இருந்தது. இந்த நடைமுறை 13ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் உச்சத்தை அடைந்தது. இந்த காலகட்டத்தில் தீர்ப்பாயங்கள் போப்பாண்டவர் உட்பட எந்தவொரு அதிகாரத்திலிருந்தும் முற்றிலும் விடுபட்டது. எனவே கத்தோலிக்க துரோகிகளை ஒழிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

தெற்கு ஐரோப்பாவில் திருச்சபை நடத்தும் நீதிமன்றங்கள் இடைக்கால காலத்தில் அரகோன் இராச்சியத்தில் இருந்தது. ஆனால் ஐபீரிய தீபகற்பத்திலோ அல்லது இங்கிலாந்து உட்பட வேறு சில இராஜ்யங்களிலோ இல்லை.

ஜோன் ஆஃப் ஆர்க் தொகு

பிரான்சு நாட்டு மணி முடிக்காக 1337 முதல் 1453 முடிய நடைபெற்ற நூறாண்டுப் போரில் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையிலான படைகள் இங்கிலாந்து இராச்சியத்தின் படைகளை வெற்றி கொண்டார். இருப்பினும் 1430ஆம் ஆண்டில் பர்கண்டியப் படைகளால் கைது செய்யப்பட்ட ஜோன் ஆஃப் ஆர்க் இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் ஆதரவாளரான ஆயர் பியர் கௌச்சன் தலைமையிலான திருச்சபை நீதிமன்றத்தில், கத்தோலிக்க சமயத்திற்கு எதிரான குற்றத்திற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 30 மே 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க் உயிரிடன் எரிக்கப்பட்டார்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு