போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை

போர்த்துகீசிய கிறித்தவ சமயக் விசாரணை, இதனை அதிகாரப்பூர்வமாக போர்ச்சுகலில் உள்ள விசாரணையின் கத்தோலிக்க திருச்சபையின் பொதுக்குழு என்று அழைக்கப்படுகிறது. இத்திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தை போர்த்துக்கல் பேரரசர் மூன்றாம் ஜான் வேண்டுகோளின்படி, கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாண்டவர் மூன்றாம் பவுல் அனுமதியுடன் 1536 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் பேரரசில் முறையாக நிறுவப்பட்டது. இக்குற்ற விசாரணை மன்றம் 1536 முதல் 1821 ஆண்டு முடிய செயல்பட்டது. இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணைக்குப் பிந்தைய காலத்தில் நடைபெற்ற எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணைக்குப் (1478-1834) பின்னர் போர்த்துக்கல் கிறித்தவ சமயக் குற்ற விசாரணை மன்றம் நிறுவப்பட்டது. போர்த்துகீசிய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியினரால் கோவாவில் கத்தோலிக்க கிறித்தவ சமயக் குற்ற விசாரணை நடைபெற்றது. உரோமைச் சமயக் குற்ற விசாரணை மன்றம் 1542 முதல் 1650 முடிய செயல்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையால் போர்த்துகீசிய நாட்டில் நிறுவப்பட்ட சமயக் குற்ற விசாரணை மன்றம்

Conselho Geral do Santo Ofício da Inquisição
மரபு சின்னம் அல்லது சின்னம்
திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தின் இலச்சினை
வகை
வகை
போர்த்துகீசியப் பேரரசால் நியமிக்கப்பட்ட குழு
வரலாறு
உருவாக்கம்23 மே 1536
செயலிழப்பு31 மார்ச் 1821
உறுப்பினர்கள்கத்தோலிக்க திருச்சபை மற்றும் போர்த்துகீசியப் பேரரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு
தேர்தல்கள்
இக்குழுவின் தலைவரை போர்த்துக்கல் பேரரசர் நியமனம் செய்கிறார்
கூடும் இடம்
போர்த்துகல் பேரரசு
தலைமையிடம்:லிஸ்பன்
அடிக்குறிப்புகள்
இதனையும் காண்க:
கோவா சமயக் குற்றவிசாரணை
எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை
உரோமைச் சமயக் குற்ற விசாரணை
திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தில் கலீலியோ கலிலி

வரலாறு தொகு

போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தின் முக்கிய இலக்கு, யூத சமயத்திலிருந்து கத்தோலிக்க சமயத்திற்கு மாறிய இரகசிய யூதர்கள் (இவர்களை புதிய கிறிஸ்தவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) யூத சமயத்தை இரகசியமாக கடைப்பிடிப்பதாக போர்த்துகல் பேரரசு சந்தேகிக்கப்பட்டது. இவர்களில் பலர் முதலில் எசுப்பானியா யூதர்கள் ஆவார். எசுப்பானியா நாடு யூதர்களை கிறித்துவத்திற்கு மதம் மாறவும், மீறினால் நாட்டை விட்டு வெளியேறவும் ஆணையிடப்பட்டது. எனவே எசுப்பானிய யூதர்கள் சுமார் 40,000 பேர் போர்த்துகல் நாட்டிற்கு புலம்பெயர்ந்தனர்.[1] போர்த்துக்கல் இராச்சியத்தில் வாழும் இரகசிய யூதர்களையும் மற்றும் ஆப்பிரிக்க காலனியாதிக்கப் பிரதேசங்களில் பழங்குடி சமயங்களைப் பின்பற்றி, பின்னர் கத்தோலிக்கச் சமயத்திற்கு மதம் மாறிய மக்களையும் திரிபுக் கொள்கை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்விசாரணை மூலம் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிரான கொள்கை கொண்டவர்களையும், இரகசிய யூதர்களையும், பில்லி, சூனியம், மாந்திரீகம், இருதார திருமணம் செய்வது போன்ற குற்றங்கள் செய்தவர்களை விசாரித்து சிறையில் அடைக்கப்பட்டனர்.[2] முதலில் கத்தோலிக்க சமயம் சார்ந்த விஷயங்களை இலக்காகக் கொண்ட விசாரணை, போர்த்துகீசிய வாழ்க்கையின் அரசியல், பண்பாடு மற்றும் சமூகம் ஆகிய ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஸ்பெயினில் உள்ளதைப் போலவே, திரிபுக் கொள்கை விசாரணையும் [[போர்த்துக்கல் பேரரசரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இருப்பினும் நடைமுறையில் போர்த்துகீசிய விசாரணையானது, எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையுடன் ஒப்பிடும்போது போர்த்துக்கல் பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகிய இருவருக்கும் கணிசமான அளவு நிறுவன சுதந்திரத்தைப் பயன்படுத்தினர்.[3] போப்பாண்டவரின் அனுமதியுடன் போர்த்துகீசிய பேரரசரால் திரிபுக் கொள்கை விசாரணை மன்றம் நிறுவப்பட்டது. இந்த விசாரணை மன்றத்தின் தலைவராக போர்த்துகல் அரச குடும்பத்தினர் ஒருவர் இருப்பார்.

போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை மன்றம் 1540ஆம் ஆண்டில் போர்ச்சுகலில் தனது முதல் விசாரணையை மேற்கொண்டது. எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையைப் போலவே, பிற சமயங்களிலிருந்து, குறிப்பாக யூத சமயத்திலிருந்து கத்தோலிக்க சமயத்திற்கு மாறியவர்களை வேரறுப்பதில் இந்த விசாரணை மன்றம் அதிக கவனம் செலுத்தியது.

போர்த்துகீசிய சமயக் குற்ற விசாரணையானது, அதன் காலனியாதிக்கப் பகுதிகளாக இருந்த பிரேசில் மற்றும் இந்தியாவில் கோவா சமயக் குற்றவிசாரணை வரை விரிவுபடுத்தியது. இப்பகுதிகளில் 1821ஆம் ஆண்டு வரை மரபுவழி ரோமன் கத்தோலிக்கச் சமய மீறல்களின் அடிப்படையில் வழக்குகளை விசாரித்து விசாரணையைத் தொடர்ந்தது. இத்திரிபுக் கொள்கை விசாரணை மன்றம் தனது செயல்பாட்டை போர்த்துக்கல் பேரரசர் மூன்றாம் ஜான் காலத்தில் துவங்கியது.

போர்ச்சுகலில் வாழ்ந்த பல புதிய கிறிஸ்தவர்கள் 1500ஆம் ஆண்டுகளில் விசாரணையின் விளைவாக இந்தியாவின் கோவாவிற்கு குடிபெயர்ந்தனர். இவ்வாறு புலம்பெயர்ந்த இரகசிய யூதர்கள் மற்றும் இரகசிய முஸ்லிம்கள், அவர்கள் தங்கள் பழைய மதங்களை ரகசியமாக கடைப்பிடித்து வந்தனர். இது போர்த்துகீசியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. ஏனெனில் ஐபீரியாவில் யூதர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து கிறிஸ்தவ ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தனர்.[4] இயேசு சபையின் பிரான்சிஸ் சவேரியார், கத்தோலிக்க சமயத்திற்கு பொய்யாக மதம் மாறியவர்களைக் கையாள்வதற்காக, போர்ச்சுகல் மன்னர் மூன்றாம் ஜான் 16 மே 1546 தேதியிட்ட கடிதத்தில் கோவா சமயக் குற்றவிசாரணையை அமைக்குமாறு கோரினார். 1560ஆம் ஆண்டில் கோவாவில் விசாரணை தொடங்கியது[5] 1560 மற்றும் 1623க்கு இடைப்பட்ட காலத்தில் தண்டனை விதிக்கப்பட்ட 1,582 நபர்களில் 45.2% பேர் யூத மதம் மற்றும் இசுலாம் சமயம் சார்ந்தோர் எனக்குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.[6] கோவா சமயக் குற்றவிசாரணை மன்றம் பொய்யாக கத்தோலிக்க சமயத்திற்கு மதம் மாறிய மற்றும் மதம் மாறாத இந்துக்கள் மீதும் சமயக் குற்ற விசாரணை நடத்தியது. பொதுவெளியில் சடங்குகள், திருவிழாக்களை கடைப்பிடிப்பதற்கு எதிரான தடைகளை மீறிய மதம் மாறாத இந்துக்கள் மற்றும் கத்தோலிக்க மதத்திற்கு உண்மையாக மதம் மாறியவர்களுக்கு இடையூறு விளைவித்த மதம் மாறாத இந்துக்கள் மீது வழக்குத் தொடுத்தது.[7] 1560ஆம் ஆண்டு தொடக்கம் 1821ஆம் ஆண்டு இறுதி வரை கோவா சமயக் குற்றவிசாரணையில் 57 இந்துக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.[8]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Saraiva, António José (2001), "Introduction to the English edition", The Marrano Factory: The Portuguese Inquisition and Its New Christians 1536–1765, Brill, p. 9.
  2. Cécile Fromont (June 2020). Jain, Andrea R.. ed. "Paper, Ink, Vodun, and the Inquisition: Tracing Power, Slavery, and Witchcraft in the Early Modern Portuguese Atlantic". Journal of the American Academy of Religion (Oxford: Oxford University Press on behalf of the American Academy of Religion) 88 (2): 460–504. doi:10.1093/jaarel/lfaa020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7189. இணையக் கணினி நூலக மையம்:1479270. 
  3. Paiva, Jose P. (30 November 2016). "Philip IV of Spain and the Portuguese Inquisition (1621–1641)". Journal of Religious History 41 (3): 364–385. doi:10.1111/1467-9809.12406. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/1467-9809.12406. பார்த்த நாள்: 30 April 2022. 
  4. Roth, Norman (1994), Jews, Visigoths and Muslims in medieval Spain : cooperation and conflict, pp.79–90, Leiden: Brill, ISBN 978-90-04-09971-5
  5. Anthony D’Costa (1965). The Christianisation of the Goa Islands 1510-1567. Bombay: Heras Institute. 
  6. Delgado Figueira, João (1623). Listas da Inquisição de Goa (1560-1623). Lisbon: Biblioteca Nacional. 
  7. Prabhu, Alan Machado (1999). Sarasvati's Children: A History of the Mangalorean Christians. I.J.A. Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-86778-25-8. https://archive.org/details/sarasvatischildr0000mach. 
  8. de Almeida, Fortunato (1923). História da Igreja em Portugal, vol. IV. Porto: Portucalense Editora. 

உசாத்துணை தொகு

  • Christopher Black, The Italian Inquisition, Yale University Press, New Haven–London 2009
  • Costantino Corvisieri, "Compendio dei processi del Santo Uffizio di Roma (da Paolo III a Paolo IV)," Archivio della Società romana di storia patria 3 (1880), 261–290; 449-471
  • Andrea Del Col, L'Inquisizione in Italia. Dall'XI al XXI secolo, Mondadori, Milan 2006
  • Dizionario storico dell'Inquisizione, edited by V. Lavenia, A. Prosperi, J. Tedeschi, 4 vol., Edizioni della Normale, Pisa 2010
  • Massimo Firpo, Inquisizione romana e Controriforma. Studi sul cardinal Giovanni Morone (1509–1580) e il suo processo d'eresia, 2nd edition, Morcelliana, Brescia 2005
  • Massimo Firpo, Vittore Soranzo vescovo ed eretico. Riforma della Chiesa e Inquisizione nell'Italia del Cinquecento, Laterza, Rome–Bari 2006
  • Giovanni Romeo, Inquisitori, esorcisti e streghe nell'Italia della Controriforma, Sansoni, Florence, 1990
  • Giovanni Romeo, Ricerche su confessione dei peccati e Inquisizione nell'Italia del Cinquecento, La Città del Sole, Naples, 1997
  • Giovanni Romeo, L'Inquisizione nell'Italia moderna, Laterza, Rome-Bari, 2002
  • Giovanni Romeo, Amori proibiti. I concubini tra Chiesa e Inquisizione, Laterza, Rome-Bari, 2008
  • John Tedeschi, The prosecution of heresy: collected studies on the Inquisition in early modern Italy, Medieval & Renaissance texts & studies, Binghamton, New York 1991.
  • Maria Francesca Tiepolo, "Venezia", La Guida generale degli Archivi di Stato, IV, Ministero per i beni culturali e ambientali, Ufficio centrale per i beni archivistici, Roma, 1994, pp. 857–1014, 1062–1070, 1076–1140

வெளி இணைப்புகள் தொகு