இட்டெர்பியம்(III) சயனைடு

வேதிச் சேர்மம்

இட்டெர்பியம்(III) சயனைடு (Ytterbium(III) cyanide) என்பது Yb(CN)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

இட்டெர்பியம்(III) சயனைடு
Ytterbium(III) cyanide
இனங்காட்டிகள்
39705-70-9 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • [Yb+3].[C-]#N.[C-]#N.[C-]#N
பண்புகள்
Yb(CN)3
தோற்றம் வெண் திண்மம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இட்டெர்பியம் ஐசோபுரோப்பாக்சைடு அல்லது இட்டெர்பியம் என்-பியூட்டலைடை நீரற்ற கரைப்பானில் கரைக்கப்பட்ட மும்மெத்தில்சிலில்சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்டெர்பியம் சயனைடு உருவாகும். இலித்தியம் சயனைடு மற்றும் இட்டெர்பியம்(III) புரோமைடை சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) சயனைடைப் பெறலாம். ஆனால் வினையில் இடம்பெற்ற இலித்தியம் புரோமைடை முழுவதுமாக அகற்றுவது கடினமாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kiitiro Utimoto, Tsutomu Takai, Yuri Kasuga, Seijiro Matsubara (Aug 1995). "Ytterbium tricyanide: Preparation and catalytic activity for the addition of cyanotrimethylsilane to carbonyl compounds" (in en). Applied Organometallic Chemistry 9 (5-6): 413–419. doi:10.1002/aoc.590090507. பன்னாட்டுத் தர தொடர் எண்:0268-2605. http://doi.wiley.com/10.1002/aoc.590090507. பார்த்த நாள்: 2019-06-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டெர்பியம்(III)_சயனைடு&oldid=4145823" இலிருந்து மீள்விக்கப்பட்டது