இட்றௌட்டனின் விதி
இட்றௌட்டன் விதி (Trouton's rule ) என்பது ஆவியாதலின் மறை வெப்பத்திற்கும் கொதிநிலைக்குமுள்ள ஒரு தொடர்பை காட்டுவதாகும். 1876-ல் முதலில் பிக்டெட் முன்மொழிய 1877 இல் ராம்சேயும் அதன் பின் 1884 இல் இட்றௌட்டனும் இந்த விதியினை முன் வைத்தனர். இவ்விதிப்படி ஒரு மூலக்கூறின் ஆவியாகும் மறை வெப்பத்திற்கும் தனிவெப்பநிலை அலகில் அதன் கொதிநிலைக்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும்.[1][2][3]
M என்பது ஒரு பொருளின் மூலக்கூறு நிறை என்றும் அதன் ஆவியாகு மறைவெப்பம் L கலோரி/கிராம், என்றும் தனி வெப்பநிலை அலகில் அதன் கொதிநிலை T என்றும் கொண்டால்
- ML/T=மாறிலியாகும்.
பலபொருட்களுக்கும் இதன் மதிப்பு 21 கலோரி/கிராம் ஆக உள்ளது. தண்ணீருக்கு 18*540/373 =26 என்று கிடைக்கிறது.
ஆதாரம்
தொகு- Intermediate heat-Tyler
மேற்கோள்கள்
தொகு- ↑ Compare 85 J/(K·mol) in David Warren Ball (20 August 2002). Physical Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534266585. and 88 J/(K·mol) in Daniel L. Reger; Scott R. Goode; David W. Ball (27 January 2009). Chemistry: Principles and Practice. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534420123.
- ↑ Dan McLachlan Jr.; Rudolph J. Marcus (1957). "The statistical-mechanical basis of Trouton's rule". J. Chem. Educ. 34 (9): 460. doi:10.1021/ed034p460. Bibcode: 1957JChEd..34..460M.
- ↑ Shutler, P. M. E.; Cheah, H. M. (1998). "Applying Boltzmann's definition of entropy". European Journal of Physics 19 (4): 371–377. doi:10.1088/0143-0807/19/4/009. பன்னாட்டுத் தர தொடர் எண்:0143-0807. Bibcode: 1998EJPh...19..371S.