இணுவில் மத்திய கல்லூரி

இணுவில் மத்திய கல்லுாரி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். 1992 ஆம் ஆண்டு இணுவிலில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையும், இணுவில் சைவமகஜனா வித்தியாசாலையும் 1992 ஆம் ஆண்டில் ஒன்றிணைக்கப்பட்டு இணுவில் மத்திய கல்லூரியாகியது.

வரலாறு

தொகு

அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை

தொகு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மதப்பரப்புனர்களால் இணுவில் கிராமத்தில் அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்பாடசாலை இணுவில் மக்லியொட் மருத்துவமனை வளவில் நடாத்தபட்டு வந்தது. பின்னர் 1903ம் ஆண்டு சனவரி முதல் இப்பொழுதுள்ள இடத்தில் ஸ்ரான்லிடியூக் பாடசாலை என வழங்கப்பட்டு வந்தது. காங்கேசன்துறை வீதிக்கு கிழக்கே அமைந்துள்ள ஒழுங்கையில் புளிய மரங்கள் நிறைந்த இடத்தில் அமைந்திருந்ததால், இது “சீனிப் புளியடிப் பாடசாலை” என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

சைவ மகாஜனா வித்தியாசாலை

தொகு

காங்கேசன்துறை வீதிக்கு மேற்கே அமைந்துள்ள “மன்னந்தோட்டம்” எனும் இடத்தில் வேப்பமரங்கள் சூழ்ந்த சோலையில் இணுவில் சைவமகஜனா வித்தியாசாலை சைவ மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை 1930 சூன் மாதத்தில் மு. அப்புக்குட்டி என்பவரது வீட்டிற்குப் பின்புறத்தில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று பரப்பு நிலத்தில் உள்ள ஒரு கொட்டகையில் மூன்று ஆசிரியர்களுடனம் 26 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. ஆவணியில் மாணவர் எண்ணிக்கை 73 ஆனது. 1960ம் ஆண்டு இது அரச பாடசாலையானது. 1979ம் ஆண்டு உயர்தர கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மத்திய கல்லூரி

தொகு

1992 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையும், இணுவில் சைவமகஜனா வித்தியாசாலையும் ஒன்றிணைக்கப்பட்டு இணுவில் மத்திய கல்லூரியாகியது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணுவில்_மத்திய_கல்லூரி&oldid=3593050" இலிருந்து மீள்விக்கப்பட்டது