இண்டியம் அசிட்டேட்டு
வேதிச் சேர்மம்
இண்டியம் அசிட்டேட்டு (Indium acetate) In(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் சேர்மமாகும். இண்டியம் தனிமத்தின் அசிட்டேட்டு உப்பு என இது வகைப்படுத்தப்படுகிறது. நீர், அசிட்டிக் அமிலம் மற்றும் கனிம அமிலங்களில் இண்டியம் அசிட்டேட்டு கரையும்.[1] CuInS2 போன்ற சூரிய மின்கலப் பொருட்கள்,[2] இண்டியம் பாசுபைடு, குறைக்கடத்தி நுண்படிகங்கள் போன்ற இண்டியம்-கொண்ட சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இண்டியம் எத்தனோயேட்டு
இண்டியம்(III) அசிட்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
25114-58-3 | |
ChemSpider | 147211 |
EC number | 629-609-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16685169 |
| |
UNII | BNM20F6I0P |
பண்புகள் | |
In(CH3COO)3 | |
வாய்ப்பாட்டு எடை | 291.96 |
தோற்றம் | வெண்மையான நீருறிஞ்சும் தூள் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம் நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | காலியம் அசிட்டேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉறைந்த அசிட்டிக் அமிலத்துடன் இண்டியம்[4] அல்லது மூவெத்தில் இண்டியம்[5] ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் இண்டியம் அசிடேட்டைத் தயாரிக்கலாம்.
வேதிப்பண்புகள்
தொகுபுரோப்பியானிக் அமிலத்துடன் இண்டியம் அசிட்டேட்டு வினைபுரிகிறது.:[4]
- In(CH3COO)3 + CH3CH2COOH → In(CH3COO)2(CH3CH2COO) + CH3COOH
மேற்கோள்கள்
தொகு- ↑ 42230 Indium(III) acetate, 99.99% (metals basis). Alfa Aesar. [2017-11-6]
- ↑ 杨霈. 太阳能电池材料CuInS2带隙的缺陷调制研究[D]. 北京理工大学, 2014.
- ↑ 王彬彬, 王莉, 汪瑾,等. 基于元素磷源的InP量子点的制备[J]. 无机化学学报, 2012, 28(2):342-346.
- ↑ 4.0 4.1 Lindel, W.; Huber, F. Preparation and some properties of indium(III) carboxylates. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1974. 408(2) 167-174.
- ↑ 胡益民, 周虹屏. 醋酸铟化合物的合成及热稳定性研究[J]. 合成化学, 1999(1):12-14.