இண்டியம் பெர்குளோரேட்டு

வேதிச் சேர்மம்

இண்டியம் பெர்குளோரேட்டு (Indium perchlorate) என்பது In(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெர்குளோரிக்கு அமிலத்தின் இண்டியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

இண்டியம் பெர்குளோரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இண்டியம் முப்பெர்குளோரேட்டு, இண்டியம்(III) பெர்குளோரேட்டு
இனங்காட்டிகள்
13529-74-3 Y
EC number 236-874-7
InChI
  • InChI=1S/3ClHO4.In/c3*2-1(3,4)5;/h3*(H,2,3,4,5);/q;;;+3/p-3
    Key: TWFKOYFJBHUHCH-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11212117
  • [O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[O-]Cl(=O)(=O)=O.[In+3]
பண்புகள்
In(ClO
4
)
3
வாய்ப்பாட்டு எடை 413.17
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் ஆக்சிகரணி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இண்டியம் நைட்ரேட்டு , இண்டியம் சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் அலுமினியம் பெர்குளோரேட்டு, காலியம் பெர்குளோரேட்டு, தாலியம் பெர்குளோரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இண்டியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக்கு அமிலத்தில் கரைத்தால் இண்டியம் பெர்குளோரேட்டு உருவாகும்.

 

இயற்பியல் பண்புகள்

தொகு

இண்டியம்(III) பெர்குளோரேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும். இச்சேர்மம் In(ClO4)3•8H2O என்ற ஒரு படிக நீரேற்றை உருவாக்குகிறது. 80 °செல்சியசு வெப்பநிலையில் தன் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும்.[4] மேலும் இந்த எண்ணீரேற்று உப்பு எளிதில் எத்தனால் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Burgess, J. (31 October 2007). Inorganic Reaction Mechanisms: Volume 1 (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84755-648-6. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.
  2. "Indium Perchlorate" (in en). Russian Journal of Physical Chemistry (British Library Lending Division) 48, Part 3: 1611. 1974. https://books.google.com/books?id=E5gfAQAAMAAJ&q=indium(III)+perchlorate. பார்த்த நாள்: 15 March 2023. 
  3. Eyring, Edward M.; Owen, Jeffrey D. (April 1970). "Kinetics of aqueous indium(III) perchlorate dimerization". The Journal of Physical Chemistry 74 (9): 1825–1828. doi:10.1021/j100704a001. 
  4. "Indium(III) perchlorate hydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 March 2023.