இதயதமனி அடைப்பு

இதய தமனி அடைப்பு

இதய தமனி அடைப்பு [1]என்பது இரத்தத்தை எடுத்துச் செல்லும் இதய குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் நாளடைவில் இரத்தக் குழாய்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் இதயத்தின் இயக்கம் பாதிக்கப்பட்டு தமனிகளில் அடைப்பு, இதயம் செயலிழப்பு மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற இதய பிரச்சனைகள் உண்டாகின்றன.

அடைப்புகள்

இந்த இரத்த குழாய் அடைப்புகள் இதயத்தில் மட்டும் பாதிப்பதில்லை . பெருந்தமனி தடிப்பு, அல்லது தமனிகள் தடித்தல், அமைப்பில் உள்ள எந்த தமனிகளையும் தாக்கக்கூடும். இதனால் உடல் முழுவதும் வெவ்வேறு விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன.

அறிகுறிகள்

அடி முதுகில் வலி தோன்றுதல்

முதுகில் செல்லும் இரத்தக் குழாய்களில் தான் முதல் அறிகுறிகள் தோன்றுகின்றன. அங்கே அடைப்பு ஏற்பட்டு முதுகெலும்பு நரம்புகளை பலவீனப்படுத்துகிறது. பிறகு அடி முதுகில் வலி தென்படும். நாள்பட்ட முதுகுவலி உடையவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

விறைப்புத்தன்மை குறைபாடு

தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

பக்க வாதம்

மூளைக்கு செல்லும் தமனிகளில் கொழுப்பு படியும் போது இரத்த ஓட்டம் தடைபட்டு மூளை செல்கள் இறக்கின்றன. இதனால் பக்க வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதய ஆரோக்கிய வழிகள்

இதய ஆரோக்கியம்[2] தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யுங்கள்

புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தை தவிருங்கள்

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பேணுங்கள்

சரியான உடல் எடையை பேணுங்கள்

அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.


  1. "Clogged Arteries (Arterial Plaque)". WebMD (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
  2. "Heart Health and Aging". National Institute on Aging (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயதமனி_அடைப்பு&oldid=3850529" இலிருந்து மீள்விக்கப்பட்டது