இதயத்துடிப்பு மானி

இதயத்துடிப்பு மானி (stethoscope) என்பது ஒரு மருத்துவ உபகரணம் ஆகும். இது மனிதன் அல்லது விலங்கின் உடலின் உட்பகுதியில் ஏற்படும் சப்தங்களைக் கேட்க மருத்துவர்களால் உபயோகிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை ஏற்படுத்தும் சப்தங்களைக் கேட்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மேலும் தமனி மற்றும் சிரையில் உள்ள இரத்த ஓட்டத்தின் சப்தத்தைக் கேட்கவும் பயன்படுகிறது. மேலும் இத்தகைய இதயத்துடிப்பு மானிகள் உள்ளீடற்ற கலன்களின் (vacuum chambers) கசிவை அறியவும் உதவுகின்றன. உடலில் இதயம் இருக்கும் மார்புப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வைத்து பொதுவாக மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுகிறது.

தற்கால இதயத்துடிப்பு மானி.

வரலாறு தொகு

இதயத்துடிப்பு மானி கருவியைக் கண்டுபிடித்தவர் ரெனே லென்னக் என்கிற பிரெஞ்சு மருத்துவர். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec). தற்போது பரவலாக உபயோகிக்கப்படும் இதயத்துடிப்பு மானி 'பைனாரல் ஸ்டெத்’ (Binural Steth) என்பது. இதில் இரண்டு செவித் துண்டுகள், ஒரு மார்புத் துண்டு, ஆங்கில Y எழுத்துப் போன்ற குழாய் போன்றவை உள்ளன. மார்புத் துண்டு நோயாளியின் உடல் மீது வைக்கப்படுகிறது. செவித் துண்டுகள் மருத்துவரின் இரு காதுகளிலும் வைக்கப்படுகின்றன. குழல் வழியாக நோயாளியின் இதயச் சத்தங்களும், நுரையீரல் சத்தங்களும் கேட்கும். பைனாரல் இதயத்துடிப்பு மானி, 1855-ல் டாக்டர் கம்மன் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1] இதயத்துடிப்பு மானி அணிவது மருத்துவர்களுக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு ஒன்று இதயத்துடிப்பு மானி அணிவதால் மருத்துவர்களின் மீது உயர்ந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்கிறது [1].

வகைகள் தொகு

இதயத்துடிப்பு மானியில் கீழ்க்கண்ட வகைகள் உள்ளன,

  • அக்கோஸ்டிக் (Acoustic)
  • எலெக்ட்ரானிக் (Electronic)
  • பதிவு செய்யும் இதயத்துடிப்பு மானி (Recording stethoscopes)
  • கருவைப் பரிசோதிக்கும் இதயத்துடிப்பு மானி (Fetal stethoscope)
  • டாப்ளர் இதயத்துடிப்பு மானி (Doppler stethoscope)

பராமரிப்பு தொகு

இதயத்துடிப்பு மானியானது பொதுவாக ரப்பர் அல்லது நெகிழியால் செய்யப்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் அல்லது சோப்பினைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. "லப்டப்... லப்டப்..!". Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்துடிப்பு_மானி&oldid=3543514" இலிருந்து மீள்விக்கப்பட்டது