இதயப் பெருக்கம்
இதயப் பெருக்கம் (Cardiomegaly/ megacardia / megalocardia) அல்லது பேரிதயம் என்ற மருத்துவநிலை இதயம் வழமையான அளவை விட பெரிதாக இருப்பதைக் குறிக்கிறது. பொதுவாக இந்த நோயாளிகள் "விரிவடைந்த இதயம் கொண்டவராக" குறிக்கப்படுகின்றனர்.
இதயப் பெருக்கம் Cardiomegaly | |
---|---|
செயற்கை இதயமுடுக்கி உள்ள மார்பு எக்சு-கதிர் படத்தில் இதயம் பெருக்கமடைந்திருப்பதைக் காணலாம். | |
சிறப்பு | இதயவியல் |
வகைகள் | உடற்பயிற்சியாளர் இதய நோய்குறித் தொகுப்பு,[1] இதயக் கீழறை அணுப் பெருக்கம், இதய மேலறை உருப்பெருக்கம் |
காரணங்கள் | விரிவடைந்த இதயத்தசை நோய்,[2][3][4][5] அணுப்பெருக்க இதயத்தசை நோய்.[1][6][7][8][9] |
நோயறிதல் | அணுப்பெருக்க இதயத்தசை சலித்தல்[10][11] |
பேரிதயம் ஓர் நோயாக கருதப்படுவதில்லை. உடற் பருமன் அல்லது குருதி ஊட்டக்குறை இதய நோய் போன்ற மற்ற நோய்களின் காரணமாக ஏற்படுவதாகும். இதயத்தின் எந்தப் பகுதி பெருக்கமடைந்துள்ளது என்பதைப் பொருத்து பேரிதயம் அபாயகரமான அறிகுறியாக அமையும். சில நேரங்களில் இதயத் திறனிழப்பும் ஏற்படலாம். அண்மைய ஆய்வுகள் பேரிதயத்துடன் இதய நிறுத்தம் ஏற்படும் வாய்ப்பு கூடுதலாக இருப்பதாக கண்டறிந்துள்ளன.[12] இதயத் திறனிழப்பு வயதாக வயதாக கூடுகிறது. இது ஆண்களிலும் ஆபிரிக்க அமெரிக்கர்களிடையேயும் கூடுதலாக உள்ளது. இதயத் தசை நோயும் இதயப் பெருக்கத்துடன் தொடர்புடையது.[13] இதயப் பெருக்கத்திற்கான காரணங்கள் நோயாளிக்கு நோயாளி வேறுபடுகின்றது. பல நேரங்களிலும் உயர் இரத்த அழுத்தம் அல்லது குருதி ஊட்டக்குறை இதய நோய் காரணமாக உள்ளது. பெருக்கமடைந்த இதயம் குருதியை திறனுடன் ஏற்றிட இயலாது. இதனால் குருதித்தேக்க இதயத் திறனிழப்பு ஏற்படுகின்றது. இதயப் பெருக்கம் நாளடைவில் குணமடையலாம், ஆனால் இதயப் பெருக்க நோயாளிகள் பலரும் வாழ்நாள் முழுமையும் மருந்துகள் எடுக்க வேண்டி இருக்கும்.[14] ஒருவருடைய நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு பேரிதயம் இருந்தால் அவருக்கும் பேரிதயம் ஏற்படும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது (பிறவிநிலைக் கோளாறு).[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Enlarged heart". Heart and Stroke Foundation of Canada. Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
Types...Hypertrophic cardiomyopathy, Left ventricular hypertrophy (LVH), Intense, prolonged athletic training
- ↑ Hershberger, Ray E; Morales, Ana; Siegfried, Jill D (22 September 2010). "Clinical and genetic issues in dilated cardiomyopathy: A review for genetics professionals". Genetics in Medicine 12 (11): 655–667. doi:10.1097/GIM.0b013e3181f2481f. பப்மெட்:20864896.
- ↑ Luk, A; Ahn, E; Soor, G S; Butany, J (18 November 2008). "Dilated cardiomyopathy: a review". Journal of Clinical Pathology 62 (3): 219–225. doi:10.1136/jcp.2008.060731. பப்மெட்:19017683.
- ↑ "What Is an Enlarged Heart (Cardiomegaly)?". WebMD. 2019-01-30. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ Lee, Ji Eun; Oh, Jin-Hee; Lee, Jae Young; Koh, Dae Kyun (2014). "Massive Cardiomegaly due to Dilated Cardiomyopathy Causing Bronchial Obstruction in an Infant". Journal of Cardiovascular Ultrasound 22 (2): 84–7. doi:10.4250/jcu.2014.22.2.84. பப்மெட்:25031799.
- ↑ Marian, Ali J.; Braunwald, Eugene (15 September 2017). "Hypertrophic Cardiomyopathy". Circulation Research 121 (7): 749–770. doi:10.1161/CIRCRESAHA.117.311059. பப்மெட்:28912181.
- ↑ Maron, Martin S (1 February 2012). "Clinical Utility of Cardiovascular Magnetic Resonance in Hypertrophic Cardiomyopathy". Journal of Cardiovascular Magnetic Resonance 14 (1): 13. doi:10.1186/1532-429X-14-13. பப்மெட்:22296938.
- ↑ Almog, C; Weissberg, D; Herczeg, E; Pajewski, M (1 February 1977). "Thymolipoma simulating cardiomegaly: a clinicopathological rarity.". Thorax 32 (1): 116–120. doi:10.1136/thx.32.1.116. பப்மெட்:138960.
- ↑ Hou, Jianglong; Kang, Y. James (September 2012). "Regression of pathological cardiac hypertrophy: Signaling pathways and therapeutic targets". Pharmacology & Therapeutics 135 (3): 337–354. doi:10.1016/j.pharmthera.2012.06.006. பப்மெட்:22750195.
- ↑ Luis Fuentes, Virginia; Wilkie, Lois J. (September 2017). "Asymptomatic Hypertrophic Cardiomyopathy". Veterinary Clinics of North America: Small Animal Practice 47 (5): 1041–1054. doi:10.1016/j.cvsm.2017.05.002. பப்மெட்:28662873. https://researchonline.rvc.ac.uk/id/eprint/10891/1/10891.pdf.
- ↑ Maron, Barry J; Maron, Martin S (January 2013). "Hypertrophic cardiomyopathy". The Lancet 381 (9862): 242–255. doi:10.1016/S0140-6736(12)60397-3. பப்மெட்:22874472.
- ↑ Tavora F (2012). "Cardiomegaly is a common arrhythmogenic substrate in adult sudden cardiac deaths and is associated with obesity.". Pathology 44 (3): 187–91. doi:10.1097/PAT.0b013e3283513f54. பப்மெட்:22406485.
- ↑ "Overview of Cardiomyopathies". The Lecturio Medical Concept Library. பார்க்கப்பட்ட நாள் 25 August 2021.
- ↑ "What Is an Enlarged Heart (Cardiomegaly)?". WebMD.
- ↑ "Enlarged heart - Symptoms and causes". mayoclinic.org. பார்க்கப்பட்ட நாள் 19 March 2018.
மேலும் படிக்க
தொகு- Amin, Hina; Siddiqui, Waqas J. (2019). "Cardiomegaly". StatPearls. StatPearls Publishing.
- Ampanozi, Garyfalia; Krinke, Eileen; Laberke, Patrick; Schweitzer, Wolf; Thali, Michael J.; Ebert, Lars C. (1 September 2018). "Comparing fist size to heart size is not a viable technique to assess cardiomegaly". Cardiovascular Pathology 36: 1–5. doi:10.1016/j.carpath.2018.04.009. பப்மெட்:29859507.
- Agostoni, PierGiuseppe; Cattadori, Gaia; Guazzi, Marco; Palermo, Pietro; Bussotti, Maurizio; Marenzi, Giancarlo (1 November 2000). "Cardiomegaly as a possible cause of lung dysfunction in patients with heart failure". American Heart Journal 140 (5): A17–A21. doi:10.1067/mhj.2000.110282. பப்மெட்:11054632.
- Luedde, Mark; Katus, Hugo; Frey, Norbert (1 January 2006). "Novel Molecular Targets in the Treatment of Cardiac Hypertrophy". Recent Patents on Cardiovascular Drug Discovery 1 (1): 1–20. doi:10.2174/157489006775244290. பப்மெட்:18221071.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு |
---|