இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு

திறன்மிகு நாள விரிப்பியான (Vasodilator) இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு [Atrial natriuretic peptide; (ANP), atrial natriuretic factor; (ANF), atrial natriuretic hormone; (ANH), Cardionatrine, Cardiodilatine; (CDD), atriopeptin], இதயத்தசைச் செல்களால் சுரக்கப்படும் புரதக்கூற்று இயக்குநீராகும்[2][3][4]. இப்புரதக்கூறானது உடலின் நீர், சோடியம், பொட்டாசியம், கொழுப்புத் திசுக்களில் உள்ள கொழுப்பு ஆகியவற்றின் சமநிலையைக் கட்டுபடுத்துவதில் ஈடுபட்டுள்ளது; இரத்தத்தின் கன அளவு அதிகரிக்கும்போது இதய மேலறையிலுள்ள தசைச் செல்களால் வெளியிடப்படுகிறது; இரத்தச் சுற்றோட்டத்தில் நீர், சோடியம், கொழுப்பு அளவுகளைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது[2]. சிறுநீரகக்குழல் வலைப்பின்னல் மண்டலத்தினால் (zone glomerulosa) சுரக்கப்படும் இஸ்டீராய்டு இயக்குநீரான அல்டோஸ்டீரோனின் செயற்பாடுகளுக்கு எதிர்மறையான பண்புகளைக் கொண்டுள்ளது[5].

இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூற்றின் வடிவம்
இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு ஏற்பியுடன் இதயியச் சோடியச்சிறுநீர்மைப் புரதக்கூறு கூட்டிணைவின் முப்பரிமாண வடிவம்[1]

மேற்கோள்கள்

தொகு
  1. He XL, Dukkipati A, Garcia KC (2006). "Structural determinants of natriuretic peptide receptor specificity and degeneracy.". J Mol Biol 361 (4): 698-714. பப்மெட்:16870210. 
  2. 2.0 2.1 Widmaier, Eric P. (2008). Vander's Human Physiology, 11th Ed. McGraw-Hill. pp. 291, 509–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-304962-5. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  3. Potter LR, Yoder AR, Flora DR, Antos LK, Dickey DM (2009). "Natriuretic peptides: their structures, receptors, physiologic functions and therapeutic applications". Handb Exp Pharmacol. Handbook of Experimental Pharmacology 191 (191): 341–66. doi:10.1007/978-3-540-68964-5_15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-68960-7. பப்மெட்:19089336. 
  4. Addicks K, Forssmann WG, Henkel H, Holthausen U, Menz V, Rippegather G, Ziskoven D (1989). "Calcium-calmodulin antagonists Influences the release of cardiodilatin/ANP from atrial cardiocytes". In Wambach G, Kaufmann W (ed.). Endocrinology of the heart. Berlin: Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-51409-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Marieb Human Anatomy & Physiology 9th edition, chapter:16, page:629, question number:14