இதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும் (Idhuvum Kadandhu Pogum) 2014 இல் வெளிவந்த தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட குறும்படமாகும். இதை அறிமுக இயக்குநர்கள் அனில் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீஹரி பிரபாகரன் இயக்கியுள்ளனர். கதை,திரைக்கதை,வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகரன் எழுதியுள்ளார். இப்படத்தில் சிவாஜி தேவ், ஷில்பா பட் மற்றும் அனுஷா வர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]
இதுவும் கடந்து போகும் | |
---|---|
இயக்கம் | அனில் கிருஷ்ணன் ஸ்ரீஹரி பிரபாகரன் |
தயாரிப்பு | எம். சரவணன்] எம். எஸ். குகன் அருணா குகன் அபர்ணா குகன் |
கதை | ஸ்ரீஹரி பிரபாகரன் |
இசை | உமாசங்கர் |
நடிப்பு | சிவாஜி தேவ் ஷில்பா பட் ரவி ராகவேந்திரா |
ஒளிப்பதிவு | சலீம் பிலால் |
படத்தொகுப்பு | அனில் கிருஷ்ணன் |
கலையகம் | ஏவிஎம் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | ஏவிஎம் பிரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 2014 |
ஓட்டம் | 53 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் சகோதரிகள் அருணா குகன், மற்றும் அபர்ணா குகன் இப்படத்தை தயாரித்துள்ளனர். சலீம் பிலால் ஒளிப்பதிவையும், படத்தொகுப்பை அனில் கிருஷ்ணனும், மற்றும் உமாசங்கர் இப்படத்திற்கு இசை அமைப்பையும் செய்துள்ளனர். மணிவண்ணன் மற்றும் சத்யசீலன் ராஜேந்திரன் பாடல்களை எழுதியுள்ளனர். இது இணையத்தில் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.[2] இப் படம் ஏப்ரல் 14, 2014இல் யூ டியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டது.
கதை சுருக்கம்
தொகுபடம் ஒரு துயரத்துடன் தொடங்குகிறது. கதையில் கௌதமின் (சிவாஜி தேவ்) வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் முன்னும், பின்னுமாக காட்டப்படுகிறது. கௌதம் என்ற இளைஞன், அமெரிக்காவில் உள்ள தன் காதலி ரம்யாவுடன் நள்ளிரவில் பேசும் போது, ரம்யா தனக்குச் சிறிது நேரத்தில் எதிர்பாராமல் ஏதோ ஒன்று நடக்கப் போவதாக கூறுகிறாள். மறுநாள் காலை ரம்யா விபத்துக்குள்ளாகி, இறந்துவிடுகிறாள். இச் சம்பவம் கௌதமின் மனதை வெகுவாக பாதிக்கிறது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறான்.
நடிப்பு
தொகு- கௌதமாக சிவாஜி தேவ்
- குமார், கௌதமின் தந்தையாக ரவி ராகவேந்திரா
- ரம்யாவாக ஷில்பா பட்
- திவ்யாவாக அனுஷா வர்மா
- மணி, கௌதமின் சகோதரராக பெர்கின் ஜான்ஸ்
- தீபிகாவாக அஞ்சலி அனீஷ் உபாசனா
- ர்ம்யாவின் தந்தையாக அஷோக் பாண்டியன்
- மருத்துவராக அனு சந்திரசேகரன்
தயாரிப்பு
தொகுஏ. வி. மெய்யப்பன் அவர்களால் 1945இல்நிறுவப்பட்டது ஏவிஎம் ஸ்டூடியோ ஆசியாவின் மிகப்பழைய படப்பிடிப்புத் தளமாக விளங்குகிறது.[3] அருணா குகன், அபர்ணா குகன் ஆகிய இருவரும் ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் குடும்பத்தின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.[4][5].[5][6]
வெளியீடு
தொகுநவம்பர் 22, 2013 இல் ஏவிஎம் ஸ்டூடியோவில் எம். சரவணன், எம். எச். குகன் மற்றும் இயக்குநர் எஸ். பி. முத்துராமன் முன்னிலையில் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது[7] இது யூ டியூப்பில் ஏப்ரல் 14, 2014 இல் வெளிவந்தது.[4]
விமர்சனம்
தொகுதி இந்து பத்திரிகையின் நிருபர் மாலதி ரங்கராஜன், இப்படம் கதைஅம்சத்துடன் உள்ளது எனவும், சிவாஜி தேவ் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தி உள்ளார் எனவும் பாராட்டியுள்ளார். மேலும் ரவிராகவேந்தர் சிறப்பாக நடித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.[6] இப்படம் குறும்படத்திற்கான இலக்கணத்துடன் இருக்கிறது என்றும் பாராட்டியுள்ளார்.[2]
பாராட்டுகள்
தொகுஇயக்குநர் எஸ். பி. முத்துராமன், இப்படம் மனதை உருக்குவதாக உள்ளது எனவும், இதில் நடித்தவர்கள் அனுபவமிக்க நடிகர்களைப் போல நடித்துள்ளனர் எனவும் பாராட்டியுள்ளார். சலீம் பிலால் படத்தின் ஒளிப்பதிவை சிறப்பாக செய்திருக்கிறார் எனவும், இசை படத்தின் கதையோடு ஒன்றியிருப்பதாகவும் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் இப் படம் பாலு மகேந்திரா, மணி ரத்னம் போன்றவர்களின் படத்தைப் போல உள்ளது எனப் பாராட்டியுள்ளார்.[8] இது 2014இல் நடைபெற்ற மாட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடுவதற்கு அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக பரிந்துரை செய்யப்பட்டது.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Malini Mannath (11 April 2014). "Made in Madras: Digital start". தி நியூ இந்தியன் எக்சுபிரசு; தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 16 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140416192038/http://indulge.newindianexpress.com/made-in-madras-22/chennai/9123.
- ↑ 2.0 2.1 Udhav Naig (16 April 2014). "Net gain for short film". The Hindu இம் மூலத்தில் இருந்து 16 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140416193729/http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/net-gain-for-short-film/article5918894.ece.
- ↑ Sibi Arasu (25 July 2014). "Coming soon to a website near you". பிசினஸ் லைன் இம் மூலத்தில் இருந்து 20 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140920164641/http://www.thehindubusinessline.com/features/blink/watch/coming-soon-to-a-website-near-you/article6245712.ece.
- ↑ 4.0 4.1 Sangeetha Kandavel (14 April 2014). "Fourth Generation AVM producers to launch latest flick on youtube". தி எகனாமிக் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 16 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140416192313/http://articles.economictimes.indiatimes.com/2014-04-14/news/49126371_1_avm-productions-av-meiyappan-film-industry.
- ↑ 5.0 5.1 N. Ramakrishnan (12 December 2013). "4th Gen AVM scions into film production". Business Line இம் மூலத்தில் இருந்து 16 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140416192444/http://www.thehindubusinessline.com/news/4th-gen-avm-scions-into-film-production/article5452400.ece.
- ↑ 6.0 6.1 Malathi Rangarajan (23 November 2013). "Entering the Internet fray". The Hindu இம் மூலத்தில் இருந்து 2 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202223005/http://www.thehindu.com/features/cinema/entering-the-internet-fray/article5383291.ece.
- ↑ MovieBuzz (23 November 2013). "AVM enters online with short film". சிஃபி இம் மூலத்தில் இருந்து 20 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140920171434/http://www.sify.com/movies/avm-enters-online-with-short-film-news-tamil-nlxkTcaiigfsi.html.
- ↑ SP. Muthuraman & Superstar Rajini's view of Idhuvum Kadandhu Pogum (YouTube). AVM Productions. 15 April 2014.
- ↑ "Nominations 2014: Best Cinematography". Madrid International Film Festival. Archived from the original on 19 April 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.
- ↑ "Nominations 2014: Best Costume". Madrid International Film Festival. Archived from the original on 19 April 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2014.