இந்தியகாமா

இந்தியகாமா
புதைப்படிவ காலம்:Ypresian
~55–49 Ma
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
†இந்தியகாமா

இராணா மற்றும் பலர், 2013
மாதிரி இனம்
இந்தியகாமா குசராட்டா
இராணா மற்றும் பலர், 2013

இந்தியகாமா (Indiagama) என்பது அழிந்துபோன ஓந்தி பேரினமாகும். இது இந்தியாவின் ஆரம்பக்கால இயோசீன் காலத்திலிருந்து இந்தியகாமா குசராட்டா மாதிரி இனம் மூலம் அறியப்படுகிறது. குசராத்தில் உள்ள கேம்பே ஷேலிலிருந்து பெறப்பட்ட கீழ் தாடையின் அடிப்படையில் இந்தியகாமா என 2013-ல் பெயரிடப்பட்டது. இதன் பற்களின் செவ்வக வடிவம் வாழும் மற்றும் அழிந்துபோன மற்ற அனைத்து ஓந்திகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Rana, R.S.; Augé, M.; Folie, A.; Rose, K.D.; Kumar, K.; Singh, L.; Sahni, A.; Smith, T. (2013). "High diversity of acrodontan lizards in the Early Eocene Vastan Lignite Mine of India". Geologica Belgica 16 (4): 290–301. https://www.researchgate.net/publication/259305420. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியகாமா&oldid=3755304" இலிருந்து மீள்விக்கப்பட்டது