1979 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
(இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1979 என்பது ஆண்டின் மத்தியில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்தப் பதவிக்கு முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி முகம்மது இதயத்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், ஆகத்து 27, 1979 அன்று தேர்தல் நடந்திருக்கும்.
| |||||||||||||||||
| |||||||||||||||||
|
அட்டவணை
தொகுதேர்தல் அட்டவணை 23 சூலை 1979 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
வ. எண் | வாக்கெடுப்பு நிகழ்வு | தேதி | |
---|---|---|---|
1. | வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 6 ஆகத்து 1979 | |
2. | வேட்புமனு பரிசீலனைக்கான தேதி | 7 ஆகத்து 1979 | |
3. | வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி | 9 ஆகத்து 1979 | |
4. | வாக்கெடுப்பு தேதி | 27 செப்டம்பர் 1979 | |
5. | எண்ணும் தேதி | இல்லை |
முடிவுகள்
தொகுமுகம்மது இதயத்துல்லா 1979 ஆகத்து 9 அன்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் 31 ஆகத்து 1979 அன்று பதவியேற்றார்.[2]