இந்தியக் குள்ளநரி

குள்ள நரி இனத்தின் துணையினம்
இந்தியக் குள்ளநரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Carnivora
குடும்பம்:
பேரினம்:
Canis
இனம்:
C. aureus
துணையினம்:
C. a. indicus
முச்சொற் பெயரீடு
Canis aureus indicus[1]
Brian Houghton Hodgson, 1833
C. a. indicus range (blue)

இந்தியக் குள்ளநரி (Indian Jackal) அல்லது இமாலயக் குள்ளநரி என்பது நாய் குடும்பத்தைச் சேர்ந்த பொன்னிறக் குள்ளநரி இனத்தின் துணையினங்களில் ஒன்றாகும். இது ஓநாய் போன்ற தோற்றம் கொண்டதாக இருந்தாலும் இதன் தாடையை வைத்து இனங்காண முடியும். இவை தென்கிழக்கு ஆசியப் பகுதிகளிலும், அனத்தோலியா, மத்திய கிழக்கு நாடுகள் தெற்கு ஆசியா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.[2]

விளக்கம்

தொகு

இந்தியக் குள்ளநரிகள் தோள், காது, கால்கள் போன்றவற்றில் அதிக வெள்ளையும், கருப்பும் கலந்த முடிகளுடன் காணப்படுகின்றன. ஆனாலும் இதன் நிறம் மஞ்சளும், சிகப்பும், கலந்த சாம்பல் போன்ற மண் நிறத்தில் உள்ளது.[3] மேற்கு வங்காளத்தில் காணப்படும் இவ்வகையான நரிகள் கொஞ்சம் கருப்பு கலந்ததாக உள்ளது.[4] இவற்றில் ஆண் நரி கொஞ்சம் பெரியதாக உள்ளது. குறைந்தது 100 சென்டி மீட்டர்கள் உயரம் கொண்டவை. இவை 8 முதல் 11 கிலோ எடை கொண்டவையாக உள்ளன.[3]

நகரங்கள் அல்லது கிராமங்களுக்கு அருகில் தாழ்வான ஒதுக்குப் புறமான பகுதிகளில் பதுங்கி வாழும் தன்மைகொண்டது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் வயநாடுக்குட்பட்ட தேயிலைத் தோட்டங்களில் இவை காப்பிக் கொட்டைகளை உட்கொண்டு வாழ்கின்றன.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Wozencraft, W. C. (2005). "Order Carnivora". In Wilson, D. E.; Reeder, D. M. (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 532–628. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  2. (இத்தாலியம்) Lapini, L. (2003). "Canis aureus (L. 1758)". In: Boitani L., Lovari S. and Vigna Taglianti A. (eds.) Fauna d’Italia. Mammalia III. Carnivora-Artiodactyla, Calderini publ., Bologna, pp. 47–58
  3. 3.0 3.1 Mammals of Nepal: (with reference to those of India, Bangladesh, Bhutan and Pakistan) by Tej Kumar Shrestha, published by Steven Simpson Books, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9524390-6-9
  4. 4.0 4.1 Jerdon, Thomas Claverhill (1867). The mammals of India: a natural history of all the animals known to inhabit continental India, Thomason college press
  5. Robert Armitage Sterndale (1884). Natural history of the Mammalia of India and Ceylon. Calcutta: Thacker, Spink.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியக்_குள்ளநரி&oldid=4113812" இலிருந்து மீள்விக்கப்பட்டது