இந்தியத் தேசிய காங்கிரசு (செகசீவன்ராம்)

இந்தியத் தேசிய காங்கிரசு (செகசீவன்ராம்)(Indian National Congress (Jagjivan)) என்பது இந்தியாவில் உள்ள ஒருஅரசியல் கட்சி ஆகும். ஜெகசீவன்ராம் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, ஆகத்து 1981-ல் இக்கட்சி உருவாக்கப்பட்டது.

இந்தியத் தேசிய காங்கிரசு (ஜெகசீவன்ராம்)
சுருக்கக்குறிINC(J)
நிறுவனர்ஜெகசீவன்ராம்
தொடக்கம்1981
(43 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (1981)
கலைப்பு1986
(38 ஆண்டுகளுக்கு முன்னர்)
 (1986)
இந்தியா அரசியல்

கட்சித் தலைவர் தேவராஜா உர்சை கட்சியிலிருந்து நீக்கி, அகில இந்தியத் காங்கிரசு கட்சி கூட்டத்தை ஜெகசீவன்ராம் நடத்தினார். இதன் காரணமாகக் காங்கிரசிலிருந்து ராம் வெளியேற்றப்பட்டார்.[1]

இக்கட்சி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சில உறுப்பினர்களுடன் செயல்பட்டது. ஆனால் 1986-ல் ஜெகசீவன்ராமின் மரணத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Andersen, Walter K.. India in 1981: Stronger Political Authority and Social Tension, published in Asian Survey, Vol. 22, No. 2, A Survey of Asia in 1981: Part II (Feb., 1982), pp. 119-135