தேவராஜா அரசு

இந்திய அரசியல்வாதி

தேவராஜா அரசு (D. Devaraj Urs, தே. தேவராஜ் அர்ஸ்) (20 ஆகஸ்டு 1915 – 18 மே 1982)இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1972 – 1977 மற்றும் 1978 – 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியவர். 1952-இல் அரசியலுக்கு வாழ்கையில் நுழைந்த தேவராஜா அரசு, கர்நாடக சட்ட மன்ற உறுப்பினராக 1952 முதல் 1980 வரை தொடர்ந்து பணியாற்றியவர். [1] [2]

தேவராஜா அரசு
கர்நாடக மாநிலத்தின் 8வது முதலமைச்சர்
பதவியில்
20 மார்ச் 1972 – 31 டிசம்பர் 1977
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
28 பிப்ரவரி 1978 – 7 சனவரி 1980
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்ஆர். குண்டுராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஆகஸ்டு 1915
மைசூர், மைசூர் மாவட்டம்
இறப்பு18 மே 1982
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு கட்சி
இந்திய தேசிய காங்கிரசு (அரசு)

1969-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாக பிளவுற்ற போது, இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் மைசூர் மாவட்டத்தில் உள்ள கல்லஹள்ளி என்னும் ஊரில் தேவிரா அம்மணி, தேவராஜா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர்கள் அரச வம்சத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மைசூர் உடையார் குடும்பத்தினர்க்கு உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. D. Devaraj Urs – The social Reformer
  2. "Devaraj Urs" (PDF). Archived from the original (PDF) on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராஜா_அரசு&oldid=3712895" இலிருந்து மீள்விக்கப்பட்டது