இந்தியத் தொலைத்தொடர்புப் பணி

இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி போன்று இந்தியத் தொலைத்தொடர்புப் பணிக்கான (Indian Telecommunication Service - ITS) தேர்வுகளும் அடக்கம். இத்தேர்வுகளில் தேர்வானவர்கள் நேரடியாக நடுவண் அரசின் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றுவதோடு முழுமையும் இந்திய அரசுக்குச் சொந்தமாக அத்துறையின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் மற்றும் மகாநகர் டெலிகாம் நிகாம் லிமிடட் (எம்டிஎன்எல்) போன்ற தொலைதொடர்பு நிறுவனங்களில் வேற்றுப்பணியில் (deputation) பணி புரிகின்றனர். துவக்கத்தில் துணை கோட்டப் பொறியாளர் (ADET- Assistant Divisional Engineer Telecom) நிலையிலுள்ள பணியில் அமர்த்தப்படுவர்.