இந்தியப் புள்ளி மரந்தொத்தி

பறவை இனம்
இந்தியப் புள்ளி மரந்தொத்தி
இந்திய மாநிலம் இராசத்தானில் சிருவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செரித்திடே
பேரினம்:
சல்போர்னிசு
இனம்:
ச. சிபிலோனோடா
இருசொற் பெயரீடு
சல்போர்னிசு சிபிலோனோடா
(பிராங்ளின், 1831)[2]
வேறு பெயர்கள்

இந்தியப் புள்ளி மரந்தொத்தி ( Indian spotted creeper ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது சல்போர்னிதினே என்ற துணைக் குடும்பத்தின் உறுப்பினர் ஆகும். இந்தச் சிறிய பறவை பளிங்குக் கறுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகளைக் கொண்டுள்ளது. இது இருண்ட மரத்தண்டில் இரை தேடுவதாக உள்ளதால் கண்ணில் படுவது அரிது. மரங்களில் உள்ள ஆழமான பிளவுகளில், தன் வளைந்த அலகால் பூச்சிகளைப் பிடித்து உண்கிறது. இது வட மற்றும் மத்திய தீபகற்ப இந்தியாவின் வறண்ட புதர் மற்றும் இலையுதிர் காடுகளில் முக்கியமாக காணப்படுகிறது. இது வலசை போவதில்லை. இது உயர்ந்து வளர்ந்த பெரிய மரங்களில் விரைவாக தொத்தி இரைதேடக்கூடியது. மரங்கொத்தியைவிட விரைவாக மரக்கிளைகளில் தொத்தி ஏறும் எனப்படுகிறது. மரத்தில் செங்குத்தாக ஊர்ந்து செல்லும் போது மரங் கொத்திகளைப் போல இவற்றின் வாலை மூன்றாவது காலாக பயன்படுத்துவதில்லை.

விளக்கம்

தொகு

இந்தியப் புள்ளி மரந்தொத்தி சாம்பல் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் மற்றும் பட்டைகளுடனான இறகுகளைக் கொண்டுள்ளது. இது 16 கிராம் வரை எடையுள்ளதாகவும், 15 செ.மீ. வரை நீளமுள்ளதாகவும் உள்ளது. இந்தியப் புள்ளி மரந்தொத்தியானது, தலையை விட சற்று நீளமான, மெல்லிய கூரான கீழ்-வளைந்த அலகைக் கொண்டுள்ளது, அலகின் இந்த அமைப்பு இது மரப் பட்டைகளின் பிளவுகளில் இருந்து பூச்சிகளைப் பிடிக்க ஏற்றதாக உள்ளது. மரத்தின் செங்குத்து மேற்பரப்பில் நிறுக்க ஏதுவாக முட்டுக்கொடுக்க ஏற்ற கடினமான வால் இறகுகள் இதற்கு இல்லை. கண்ணுக்கு மேலே அகன்ற வெண்புருவம் இருக்கும். கண்ணின் வழியாக வெள்ளைக் கோட்டிற்குக் கீழே ஒரு கருங்கோடு செல்லும்.[3][4] இறக்கை நீளமாக இருக்கும். வால் பன்னிரண்டு இறகுகளைக் கொண்டது மேலும் சதுர வடிவ வாலைக் கொண்டது. இறகுகளில் பாலினங்களுக்கு இடையில் வேறுபாடு இல்லை.[5][6][7]

கணுக்கால் திடமானது மற்றும் நீண்ட பின்னங்கால் நகங்களைக் ( சராசரி 8.9 ± 0.48 ( நியமவிலகல் ) மிமீ) கொண்டிருக்கும். அலகு 25.9±1.29 மிமீ, இறக்கையின் நீளம் 88.5±2.76 மிமீ மற்றும் வால் 53.8±2.05 மிமீ நீளம் கொண்டது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Salpornis spilonota". IUCN Red List of Threatened Species 2016: e.T103882026A94286168. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103882026A94286168.en. https://www.iucnredlist.org/species/103882026/94286168. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Franklin, James (1831). "[Catalogue of birds"]. Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London (Printed for the Society by Richard Taylor) pt.1-2 (1830-1832): 114–125. https://www.biodiversitylibrary.org/page/1214233. 
  3. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington DC and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. p. 543.
  4. Harrap. S. (2008). Handbook of the birds of the world. Vol. 13. Penduline-tits to shrikes. Barcelona: Lynx Edicions.
  5. Ali, S; S.D. Ripley (1998). Handbook of the Birds of India and Pakistan. volume 9. Robins to Wagtails. New Delhi: Oxford University Press.
  6. Oates, Eugene W. (1889). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 1. London: Taylor and Francis. p. 333.
  7. Baker, E.C.S. (1922). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume 1. London: Taylor and Francis. p. 439.
  8. Tietze, Dieter Thomas; Martens, Jochen (2010). "Intraspecific differentiation in Spotted Creepers, Salpornis spilonotus (Aves:Passeriformes:Certhiidae)". Vertebrate Zoology 60 (2): 163–170. http://www.senckenberg.de/files/content/forschung/publikationen/vertebratezoology/vz60-2/07_vertebrate_zoology_60-2_tietze.pdf. பார்த்த நாள்: 2014-02-21. 

வெளி இணைப்புகள்

தொகு