2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்
2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் டிசம்பர் 2004ல் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் வாய்ந்த நிலநடுக்கம் வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிக்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையான நிலநடுக்கம் ஆகும்.இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர்.இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி 6,400 பேர், தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது .
தாய்லாந்தில் ஆழிப்பேரலை தாக்குகிறது. | |
நாள் | டிசம்பர் 26, 2004 |
---|---|
கால அளவு | 10 நிமிடங்கள் |
நிலநடுக்க அளவு | 9.3 உஒ |
ஆழம் | 30 கிமீ (19 மைல்) |
நிலநடுக்க மையம் | 3°18′58″N 95°51′14″E / 3.316°N 95.854°E |
வகை | ஆழ்கடல் நிலநடுக்கம் |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | இந்தோனீசியா (முக்கியமாக ஆச்சே) இலங்கை இந்தியா (முக்கியமாக தமிழ்நாடு) தாய்லாந்து |
ஆழிப்பேரலை | ஆம் |
உயிரிழப்புகள் | 229,866[1] |
நிலநடுக்க பண்புகள்
தொகு00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் சுமத்திரா தீவுக்கு மேற்கே, மேற்குக் கரையோரத்தில் 30 கி.மீ. ஆழத்தில் பெரிய நிலநடுக்கம் நிகழ்ந்தது. இது 9.3 ரிக்டர் அளவாக இருந்தது.