இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்

அனைத்திந்திய அரசியல் கட்சிகள், இந்தியாவில் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சிகள் ஆகும். ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்கண்ட தகுதிகளை வரையறைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தது ஆறு சதவீதத்தை பெற்று இருக்க வேண்டும் மற்றும் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் ஒரு இடத்தில் வெற்றி பெற வேண்டும். ஒரு கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் குறைந்தது மூன்று சதவீதத்தையாவது அல்லது மாநிலச் சட்டப் பேரவையில் குறைந்தபட்சம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளையாவது வென்றிருக்க வேண்டும். இவற்றில் இதில் எது அதிகமோ அதை பெற்றிருக்க வேண்டும்.[1]

அங்கீகாரம் பெற்ற தேசியக் கட்சிகளின் சிறப்புரிமைகள் தொகு

  • தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கு நாடு முழுவதும், நடைபெறும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒதுக்கப்பட்ட கட்சி சின்னத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உண்டு. இந்த சின்னம் கட்சிக்கே உரிய தனிச்சிறப்பு, வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
  • 40 நட்சத்திரப் பேச்சாளர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறப்புரிமை உண்டு. மேலும் நட்சத்திரப் பேச்சாளர்களின் தேர்தல் செலவுகள் கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசார செலவுகளில் கணக்கிடப்படுவதில்லை.
  • தலைநகரம் தில்லியில் தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகம் கட்டிக் கொள்ள அனுமதி உண்டு.
  • மற்ற கட்சிகளுக்கு இரண்டு முன்மொழிபவர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது, அங்கீகாரம் பெறப்பட்ட தேசியக் கட்சிகளுக்கு ஒரு வேட்பு மனுவைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு முன்மொழிபவர் மட்டுமே தேவை. கூடுதலாக வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, தேசிய கட்சிகளுக்கு இரண்டு இலவச வாக்காளர் பட்டியல்களும், பொதுத் தேர்தல்களின் போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு இலவச வாக்காளர் பட்டியல்களும் வழங்கப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் பின்வருமாறு:[2]

அங்கீகராம் பெற்ற தேசியக் கட்சிகள் தொகு

  1. பாரதிய ஜனதா கட்சி
  2. இந்திய தேசிய காங்கிரசு
  3. ஆம் ஆத்மி கட்சி
  4. பகுஜன் சமாஜ் கட்சி
  5. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
  6. தேசிய மக்கள் கட்சி (வடகிழக்கு இந்தியா)

அங்கீகரிக்கப்படாத தேசியக் கட்சிகள் தொகு

  1. இந்தியப் பொதுவுடமைக் கட்சி
  2. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
  3. சமாஜ்வாதி கட்சி
  4. ஐக்கிய ஜனதா தளம்

மேற்கோள்கள் தொகு