இந்தியாவில் நூலக அறிவியல் கல்வி

இந்தியாவில் நூலக அறிவியல் கல்வி (Library science education in India) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகிறது. [1] பன்னாட்டு நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் யுனெசுகோவின் உதவியுடன் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் நூலக-அறிவியல் கல்வி உத்வேகத்தை பெற்றது. [2] குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்தில் இக்கல்விப் பிரிவு ஒரு மையமாக திகழ்ந்தது. [3] 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் மூலம் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பிரபலமடைந்தது. இக்னோவுடன் கூடுதலாக 13 மாநில திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் பல நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத் திட்டங்களை வழங்குகின்றன. அலகாபாத்திலுள்ள உ.பி. ராஜர்சி டாண்டன் திறந்தவெளி பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட அளவுகளில் தொலைதூரக் கல்வி மூலம் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் நிலைகள் நூலக அறிவியலில் பட்டங்களை வழங்குகிறது.

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு