இந்தியாவில் பட்டுச் சாலை

பண்டமாற்று காலத்திலிருந்தே உலகம் தழுவிய வர்த்தக நடவடிக்கைகள் சீனா மேற்கொண்டு வருகிறது. மத்திய ஆசியா, ஐரோப்பிய நாடுகளிடையேயான தரை வழி போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.[1]

பட்டு சாலை

தொகு

சீனாவிலிருந்து பாரசீகம் வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு நடைபெற்ற தரை வழி வர்த்தகத்தில் முக்கியமான மார்க்கம் சில்க் ரோடு என்றழைக்கப்பட்டது.[2] இது சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா என்று நீண்டது. இந்த தரை வழி வர்த்தகத்தில் சீனாவின் பட்டு முக்கிய வர்த்தக பொருளாக விளங்கியதால் இதற்கு பட்டு சாலை என பெயர் வந்தது. ஆனால் கால மாற்றத்தில் பட்டு சாலை என்பதே மறைந்து விட்டது. நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திலும் பல மாற்றங்கள் உருவாகிவிட்டன.

புதிய பட்டு சாலை

தொகு

சீனா இந்த பட்டு சாலை மார்க்கத்தை புதிய வடிவில் ரயில் வழி பாதையாக உருவாக்கியுள்ளது. இதற்காக பல ஆயிரம் கோடியை ஒதுக்கி முயற்சிகளை எடுத்துள்ளது. சமீபத்தில் இந்த பட்டு சாலை மார்க்கத்தில் சரக்கு ரயில் சேவையையும் தொடங்கிவிட்டது. சீனாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டத்துக்கு நவீன வடிவம் கொடுத்ததாக சீனா கூறியுள்ளது.

பட்டு சாலை சேவை

தொகு

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள யிவூ இன் சர்வதேச ஏற்றுமதி மையத்திலிருந்து புறப்பட்டுள்ள ரயில் கஜகஸ்தான், ரஷ்யா, பெலாரஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் சென்றடைகிறது. சுமார் 12,000 கிலோமீட்டர் தூரத்தை 18 நாட்களில் கடந்து லண்டனை சென்றடையும் என்று சீனா ரயில் கார்ப்பரேசன் கூறியுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தின் போது இந்த சேவையை சீனா தொடங்கியுள்ளது.

ஏற்றுமதிப் பொருள்கள்

தொகு

இந்த ரயிலின் சரக்கு பெட்டகங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பைகள், சூட்கேஸ்கள் போன்றவை ஏற்றப்பட்டுள்ளன. இந்த பட்டு சாலை சரக்கு ரயில் சேவை மூலம் சீனாவில் ஏற்றுமதியில் புதிய மாற்றம் உருவாகும் என்றும், ஐரோப்பிய - சீனா வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யுவூ ஏற்றுமதி மண்டலம் சிறு உற்பத்தியாளர்களுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீன வர்த்தகம்

தொகு

கடந்த சில ஆண்டுகளாகவே சீன பொருளாதாரத்தில் தேக்கமான நிலை நிலவுகிறது. உள்நாட்டு நிகர உற்பத்தி 6 முதல் 7 சதவீதத்துக்குள் என்கிற நிலையிலேயே உள்ளது. 2014-ஆம் ஆண்டில் 2.34 லட்சம் கோடிக்கு நடைபெற்ற ஏற்றுமதி வர்த்தகம், 2015-ம் ஆண்டில் 2.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.[3]

ஒன் பெல்ட் ஒன் ரூட்
தொகு

இந்த நிலையில்தான் தனது பாரம்பரிய வர்த்தக பாதைக்கு புதிய வடிவத்தை சீனா கொடுத்துள்ளது. ‘ஒன் பெல்ட், ஒன் ரூட்’ என்கிற இந்த திட்டத்துக்காக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கியுள்ளது. இந்த சரக்கு ரயில் சேவைக்கு அடுத்து, தரை வழியாகவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு சரக்குகளைக் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வருகிறது. சுமார் 15 நகரங்களையும் 7 நாடுகளையும் கடந்து செல்வது இந்த ரயிலுக்கு மிகப் பெரிய சவால்தான். எப்படி இருந்தாலும்  சீனா தனது ஏற்றுமதிக்காக ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது .[4]

புதிய சந்தைகள்
தொகு

பழமையின் நவீன வடிவங்களை ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு ஏற்ப உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் சீனாவும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதுதான் சில்க் ரோடு 2.0 என்று குறிப்பிடப்படும் ஒன் பெல்ட், ஒன்ரோடு முயற்சி. அதில் முதற்கட்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

எல்லா நாடுகளும் தங்களது பாரம்பரிய வர்த்தக முறைகளுக்கு நவீன வடிவங்களை கொடுத்து வருகின்றன. நாடுகளிடையே வர்த்தகம் செய்ய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதிய சந்தைகள் உருவானது என்றால், அதற்கு முன்பிருந்தே சீனா சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தில் இருந்துள்ளது.[5]

இந்திய பட்டுசாலை
தொகு

இந்தியாவில் இருந்து சீனாவின் குன்மிங் நகர் சென்ற குழு அந்நாட்டில் உள்ள உற்பத்தி சாதனைகளையும் தன்னகத்தே கொண்டதுஅடுத்ததாக யூனான் பல்கலைக்கழகத்தில் பங்கேற்ற புதிய பட்டு வர்த்தக பாதை என கூறப்படும் பங்களாதேஷ், சீனா, இந்தியா, மியான்மர் (பிசிஐஎம்) என்ற வழித்தட அதிவேக சாலை வழி அல்லது  வர்த்தக பாதை எனப்படும்.[6]

பட்டு சாலையின் தொலைவு
தொகு

பண்டைக்காலத்தில் ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் சீனாவை இணைத்த பாரம்பரியமிக்க பட்டு வர்த்தக பாதையின் தூரம் 7000 கிலோ மீட்டர் ஆகும்.

அதே போன்று வர்த்தக பாதையை புதுப்பிக்க சீனா 1999 முதல் படுஆர்வமாக இருக்கிறது. அதனால் என்ன பயன்? நாங்கள் சீனாவினல் அடுத்த நான்கு நாட்கள் சுற்றிப் பார்த்தது குவான்சோ என்ற நகரமாகும் இங்கு தான் புயூஜின் மற்றும் பான்சோ பகுதிகள் உள்ளது. அவை யாவும் அன்றாட வீட்டு உபயோக பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட தயாரிப்பு எந்திரங்கள் வரை எல்லாமே தயாராகும் பிரதேசம் ஆகும். அந்த தயாரிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் நிச்சயம் தேவைப்படும் என்ற காரணத்தால் சீனா அந்த வர்த்தகம் வழி தடத்தில் மிக ஆர்வமாக இருக்கிறது.

இந்திய எல்லையில் பட்டு சாலை
தொகு

ஆனால் பல ஆசிய பகுதி நாடுகளை, குறிப்பாக இந்திய எல்லையை தானே கடந்து சென்றாக வேண்டும்!இந்தியாவுடன் வீண் சண்டை சச்சரவை ஏற்படுத்திக் கொண்டதால் இந்தியாவின் அவநம்பிக்கை பெற்று விட்டதால் அந்த எல்லைப் பகுதியில் நுழைவதில் சீனர்களுக்கு உள்ள சிக்கல் பெரும் பிரச்சனையாகவே அவர்களால் பார்க்கப்படுகிறது.

மாற்றுப்பாதை ஏன்?
தொகு

சீனாவின்  ஒரு வேளை மாற்றுப் பாதையில் செல்ல திட்டமிடலாம், ஆனால் அப்படி மாற்று பாதை அமையும் போது பெருவாரியான பகுதி பாகிஸ்தான் எல்லையில் இருக்கும்.அது சீனாவுக்கு விருப்பம் இல்லை . சீனாவின் அடுத்தக்கட்ட விரிவாக்கத்தில் இந்தியாவின் எல்லை வழியாக வர்த்தக பாதை அமையும். அதனால் இந்தியாவுக்கும் நிச்சயம் பலன் உண்டு.

‘பிசிஐஎம்’ என்ற சீனாவுடன் இந்தியாவை இணைக்கும் பொருளாதார விரைவு நெடுஞ்சாலை பற்றிய கருத்தரங்கு விவரங்களை கூர்மையாக கேட்டு அதன் சாராம்சத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

இணைக்கும் பகுதிகள்
தொகு

இந்த விரைவு சாலை கொல்கத்தாவையும் யூனான் மாகாணத்தில் உள்ள அதன் தலைநர் குன்மிங் நகரையும் இணைக்கும்.

இதுவே இந்தியாவையும், சீனாவையும் இணைக்கும் முதல் அதிவேக சாலை இணைப்பாக அமையும். இந்த திட்டத்தில் 1.65 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக இருக்கும், அதில் உள்ளது 4.50 கோடி மக்கள் வாழும் பிரதேசத்தை கடக்கும். அவர்கள் சீனாவின் யூனான் பகுதி மக்கள், பங்களாதேஷ் மக்கள், மியான்மர் மக்கள், இந்தியாவின் பகுதியில் பீகார் மாநிலத்தில் எல்லாம் இருப்பார்கள்.இந்த அதிவேக போக்குவரத்து பாதையில் சாலை, ரெயில், நீர் ஆகாய மார்க்கமாக எல்லாம் பயணிக்க வேண்டியது இருக்கும். இத்திட்டத்தை முதன் முதலில் வெளியிட்டது சீனாவோ இந்தியாவோ கிடையாதாம், பங்களாதேஷ்சை சார்ந்த பொருளாதார பேராசிரியர் ரகுமான் சோபன் (Prof Rehman Sobhan) என்பவர் ஆவார். குறைந்த விலையில் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்க இப்படி ஒரு வர்த்தக பாதை மிக அவசியம் என்று கூறிய அவர் தான் 1990ல் குன்மிங் முயற்சி, அதாவது Kunming Initiative என்று கூறி அதை விவரித்தார். பிறகு 1999ல் குன்மிங்க நகரில் பல பொருளாதார நிபுணர்கள், அரசியல் நோக்கர்கள் முன் தனது திட்டத்தை வெளியிட்டார். அந்த குன்மிங் முயற்சி தான் இன்று ‘பிசிஐஎம்’ பிராந்திய கூட்டுறவு BCIM Forum for Regional Coopertaion அமைப்பாக மாறிவிட்டது.[7]

அங்கிகாரம்
தொகு

இந்த பிசிஐஎம் திட்டத்துக்கு அங்கீகாரம் 2013ல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும், சீன பிரதமர் லீ கிகியூங் Li Kequiang கையெழுத்தும் போட்டுக் கொண்டதால் ஏற்பட்டது.அந்த அங்கீகார ஒப்பந்தத்தை தொடர்ந்து டிசம்பர் 18, 2013ல் அந்த நான்கு நாடுகள் ஒன்றாக நடத்திய பிசிஐஎம் கார் பந்தமும் நடந்தது. அதில் கொல்கத்தாவில் கொடி அசைத்து பங்களாதேஷ் தலைநகர் தாக்கா வழியாக சென்று குன்மிங் நகரை அடைந்தது.

குன்மிங் முதல்  மியான்மர் வரை
தொகு

பின்னர் ஏற்பட்ட திட்ட வரைவுப்படி இந்த வர்த்தக பாதை குன்மிங் நகர், முதல் மியான்மரில் உள்ள மந்தாலே, பங்களாதேஷ் நாட்டில் உள்ள தாக்கா மற்றும் சிட்டாகுங் நகரங்கள் வழியாக வந்து இந்திய எல்லையில் கொல்கத்தாவை வந்து சேர்கிறது.ஆக தென் கிழக்கு ஆசியாவின் அதிமுக்கிய வர்த்தக பகுதியாக இவ்வழித்தடம் மாறிவிடும்.இப்பகுதியில் கட்டுமான துறை அபரீத வளர்ச்சியை காணும்.தயாரிப்பு ஆலைகள், ரசாயன ஆலைகள், ஆய்வு கூட்டங்கள் மற்றும் வர்த்தக முனைகள் அரும்பும்.

சாதகங்கள்
தொகு

ஒரு கட்டத்தில் சீனாவில் அதிகரித்து வரும் தொழிலாளர் சம்பள உயர்வை கண்டு அஞ்சும் முதலீட்டாளர்களுக்கு வேலைக்கு ஆட்கள் இதர நாடுகளில் இருந்தும் பணி அமர்த்திக் கொள்ள வசதி வாய்ப்புகள் உண்டு.

மேலும் சீனாவில் தயாரிப்பு அதிகரித்து விட்டதால் ஒரு கட்டத்தில் வேறு நாடுகளிலும் தொழில் துவங்க முன் வந்தால் இந்த வழி தடத்தின் பயனாக இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மர் நாடுகள் பயன்பெறும் வாய்ப்பு உண்டு.அது மட்டுமா இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு பகுதிகளில் தொழில் மயமாக்கல் படு சுறுசுறுப்பாக மாறிவிடும்.மொத்தத்தில் பிசிஐஎம் திட்டத்தில் அதில் பங்கேற்கும் நான்கு நாடுகளுக்கும் பயன் உண்டு என்று சீன தரப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

சீன தட்டுப்பாடு
தொகு

சீனாவில் தட்டுப்பாடு ஒன்று உண்டு என்றால் அது ஆங்கிலம் தெரிந்த நிபுணர்கள், அதை பூர்த்தி செய்ய நாகாலாந்து மாநிலத்துடன் ஒப்பந்தம் செய்ய முன் வாருங்கள் என்றும் கூறினார்கள்.

அப்படி வெளியுறவு கொள்கைகளை மீறி இந்தியாவில் சீனாவின் தொழில் துறையில் உடனடியாக நுழையவே முடியாது, அது சாத்தியமே இல்லை. சீனாவின் மனநிலை என்ன? உண்மையான திட்டம் என்ன? போன்றவற்றை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளாமல், புரிந்தும் கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, எடுக்கவும் கூடாது என்பது தான் நிதர்சனமான உண்மை்.

மேலும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவுக்கு இந்த திட்டத்தில் எந்த பயனும் கிடையாது, எந்த பங்கேற்பும் இருக்க முடியாது. ஆனால் அமெரிக்காவின் வர்த்தகத்தையே ஸ்தம்பிக்கும் வகையில் புதிய வர்த்தகம் வியாபிக்கும் சூழ்நிலை உருவாகி விடும்.[8]

ஆக அமெரிக்காவின் கெடுபிடி குளறுபடிகள் இத்திட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும்.

எலியும், பூனையுமாக இருக்கும் இந்தியா, சீனா மற்றும் எல்லைப்புற நாடுகள் எப்படி கூட்டாக இத்திட்டத்தை பற்றி கூடிப் பேசி முடிவுகள் எடுக்கும்?

சமீபமாய் சீனா, இந்திய தலைவர்கள் எஸ்சிஓ (SCO), பிரிக்ஸ் (BRICS) அமைப்புகளில் ஒன்றுகூடி பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறி வருவதால் ஓர் அளவு மற்றவர்களின் கொள்கை நிலைபாடுகள் புரிந்து கொண்டு செயல்பட முடிகிறது.

வரும் காலத்தில் அடுத்த தலைமுறை தலைவர்கள் தீவிரமாய் மேலும் இந்த சோதனைகளை எல்லாம் கடந்து சாதனை புரிய மாற்று வழி முறைகளை காண்பார்கள் என நம்புவோம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Remington, Preston (1939-03), "A Special Exhibition of Victorian and Edwardian Dresses: March 14-April 23", The Metropolitan Museum of Art Bulletin, 34 (3): 53, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3256305, பன்னாட்டுத் தர தொடர் எண் 0026-1521 {{citation}}: Check date values in: |date= (help)
  2. Colwell-Chanthaphonh, Chip (2009-01), "Museum Anthropology as Applied Anthropology", Anthropology News, 50 (1): 23–23, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1556-3502.2009.50123.x, பன்னாட்டுத் தர தொடர் எண் 1541-6151 {{citation}}: Check date values in: |date= (help)
  3. Chohan, Usman W. (2017), "What Is One Belt One Road? A Surplus Recycling Mechanism Approach", SSRN Electronic Journal, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2139/ssrn.2997650, பன்னாட்டுத் தர தொடர் எண் 1556-5068
  4. "Reviews covering publications from August 15, 2017 – February 15, 2018", International Journal of Gynecological Cancer, 28: 1, 2018-05, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1097/01.igc.0000534695.89007.0e, பன்னாட்டுத் தர தொடர் எண் 1048-891X {{citation}}: Check date values in: |date= (help)
  5. Zhou, HaoMing (2018), "China, Securing "Belt and Road Initiative": Risk Management", Securing the Belt and Road Initiative, Springer Singapore: 163–177, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789811071157
  6. PPH, 23 (02), 2017-03-23, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/s-007-33631, பன்னாட்டுத் தர தொடர் எண் 0949-1619 http://dx.doi.org/10.1055/s-007-33631 {{citation}}: Missing or empty |title= (help)
  7. LIM, Tai Wei (2016-08-04), "The One Belt One Road Narratives", China's One Belt One Road Initiative, IMPERIAL COLLEGE PRESS: 151–167, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781783269297
  8. Utoktham, Chorthip; Saggu, Amandeep; Duval, Yann (2016-05-07), "Reducing Trade Costs In Asia-Pacific Developing Countries", ESCAP Studies in Trade and Investment, எண்ணிம ஆவணச் சுட்டி:10.18356/33a38344-en, பன்னாட்டுத் தர தொடர் எண் 2414-0953