இந்தியாவில் வங்கி விடுமுறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவில் வங்கி விடுமுறை என்பது வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படும் ஒரு பொது விடுமுறையாகும். அனைத்து பொது விடுமுறைகளும் வங்கி விடுமுறைகளாக வகைப்படுத்தப்படவில்லை. மத்திய/மாநில அரசுகள்/ஒன்றியப் பகுதி அரசுகளால், செலாவணி முறிச் சட்டம், 1881 இன் கீழ் வங்கி விடுமுறை மூலம் அறிவிக்கப்படுகிறது.
இந்தியா ஒரு பல கலாச்சார மற்றும் பல சமயங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்டுள்ளதால் தேசியரீதியான விடுமுறைகள் தவிர மாநிலங்கள் வாரியான சில விடுமுறைகளும் உள்ளது. மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறைகளை அறிவிக்கிறது.