இந்திய அரசாங்கத்தின் முதன்மை செயலாளர்
இந்திய அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் என்பது இந்திய மாநில அரசில் ஒரு பதவி மற்றும் பணியடுக்கு. இப்பதவியில் அமர்பவர்கள் பொதுவாக இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரியாகவோ அல்லது மூத்த அரசு அதிகாரியாகவோ இருப்பர். முதன்மை செயலாளர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மாநில அரசில் பல்வேறு துறைகளின் தலைமை நிர்வாகியாக இருப்பார்கள். இப்பதவி மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பதவிக்கு இணையானது. இவர்கள் இந்திய (மத்திய) அரசின் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுவதும் உண்டு.
பதவி
தொகுமாநில அரசின் முதன்மை செயலாளர்
தொகுமாநில அரசில் முதன்மை செயலாளர் பதவி செயலாளர் பதவிக்கு ஒரு படி மேலாகவும் இணை மற்றும் தலைமைச் செயலாளர் பதவிகளுக்கு ஒரு படி கீழாகவும் பொருத்தப்பட்டுள்ளது. முதன்மை செயலாளர்கள் நியமிக்கப்பட்ட துறையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுவர்.
பிரதம மந்திரியின் முதன்மை செயலாளர்
தொகுபிரதமரின் முதன்மை செயலாளர் என்னும் பதவி, திருமதி இந்திரா காந்தியின் பதவிக்காலத்தின் உருவாக்கப்பட்டது.[1] முதன்மை செயலாளர் பிரதமர் அலுவலகத்தின் தலைவராவார். இப்பதவி அமைச்சரவை செயலாளர் அல்லது மத்திய அரசின் முதன்மை செயலாளர் பதவிக்கு இணையான பதவியாகும்.[2] இப்பதவிக்கு இணையான மற்றொரு பதவியாக இணை முதன்மை செயலாளரும் ஒரு சில பிரதர்களால் நியமிக்கப்படுவதுண்டு.[3]
நீதிமன்றம்
தொகுஜம்மு காஷ்மீர் உயர்நீதமன்றத்தில் தலைமை நீதிபதியின் முதன்மை செயலாளர் என்னும் தனித்துவமான பதவி உள்ளது. இப்பதவி மாவட்ட அல்லது அமர்வு நீதிபதி பதவிக்கு இணையானது. இவர் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள நீதித்துறையின் பணியாளர் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் விடுப்பு தொடர்பான பணிகளை கவனிப்பார். அவர் பொது நல வழக்கு மன்றத்தின் செயலாளரும் ஆவார். தலைமை நீதிபதியின் செயலகத்தின் தலைமை அதிகாரியாகவும் முதன்மை செயலாளரே அமர்த்தப்படுவார்.
இதனையும் காண்க
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- ↑ மேத்தா, தால்பாத் சிங் (1968). இந்திய பொதுத் தொடர்பு கையேடு. புதுடெல்லி: அல்லைடு பதிப்பகம். p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170233343.
- ↑ "நிருபேந்திர மிஸ்ரா - செயலர் ஆவணம்". Department of Personnel and Training, இந்திய அரசு. Archived from the original on செப்டம்பர் 25, 2020. பார்க்கப்பட்ட நாள் August 8, 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "முனைவர் ப்ரமோத் குமார் மிஸ்ரா - செயலர் ஆவணம்". Department of Personnel and Training, இந்திய அரசு. Archived from the original on செப்டம்பர் 25, 2020. பார்க்கப்பட்ட நாள் August 14, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)