இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர்
இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர் (Principal Secretary to the Prime Minister of India (PS to the PM) இந்திய அரசின் மிக மூத்த இஆப அதிகாரியும், இந்தியப் பிரதமரின் தனிச் செயலாளரும், இந்தியப் பிரதமரின் அலுவலகத்தின் தலைவரும் ஆவார். இப்பதவிக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகளும், அதிகாரங்களும் உள்ளது. பொதுவாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நிகரான அதிகாரமுள்ள முதன்மைச் செயலாளராக இருப்பினும், பிரதமரின் முதன்மைச் செயலாளர் மட்டுமே இந்தியப் பிரதமருக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரமுள்ளது.[1][2] 2019ம் ஆண்டு முதல் பிரதமரின் முதன்மைச் செயளாருக்கு மூத்த அமைச்சருக்கான தகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.[3]
இந்திய அரசு இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயளாளர்
भारत के प्रधान मंत्री के प्रधान सचिव | |
---|---|
இந்தியப் பிரதமரின் அலுவலகம் | |
சுருக்கம் | பிரதமரின் தனிச்செயலாளர் |
அறிக்கைகள் | இந்தியப் பிரதமர் |
அலுவலகம் | இந்தியப் பிரதமரின் அலுவலகம், தலைமைச் செயலகம், தெற்கு கட்டிடம் |
நியமிப்பவர் | நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. என். ஹஸ்கர், IFS (1971–1973) |
உருவாக்கம் | 6 திசம்பர் 1971 |
அதிகாரங்கள்
தொகுஇந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர், இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத் தலைவராகச் செயல்படுகிறார். இந்திய அரசின் அன்றாட விவகாரங்களை கண்காணிக்கிறார்.
- உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் பிரதமருக்கு ஆலோசனை வழங்குதல்.[4]
- பிரதமரால் ஒதுக்கப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் விவகாரங்களை மேற்பார்வை செய்தல்.[4]
- பிரதம அமைச்சர் அலுவலகத்தில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்.[4]
- பிரதம மந்திரி அலுவலகத்தில் உத்தியோகபூர்வ, அரசாங்க, முக்கியமான ஆவணங்களைக் கையாளுதல்.[4]
- மூத்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பிற உயரதிகாரிகளுடன் பிரதம மந்திரி விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த குறிப்புகளைத் தயாரித்தல்.[4]
- ஒப்புதல் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய கோப்புகளை பிரதமரின் முன் வைப்பது.[4]
பிரதமரின் முதன்மைச் செயலாளர் பொதுவாக பிரதம அமைச்சரின் மிக முக்கியமான உதவியாளராகக் கருதப்படுகிறார்.[5][6]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "PK Sinha to be next cabinet secretary: All you should know about India's most powerful bureaucrat". Firstpost. FP Staff. Network 18. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: CS1 maint: others (link) - ↑ "From Power Secretary to the most powerful bureaucrat". பிசினஸ் லைன். Our Bureau. New Delhi: The Hindu Group. 29 May 2015. பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-7528. இணையக் கணினி நூலக மைய எண் 456162874. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
{{cite web}}
: CS1 maint: others (link) - ↑ "Government gives cabinet rank, extension to Nripendra Misra and PK Mishra". The Economic Times. 2019-06-11. https://economictimes.indiatimes.com/news/economy/policy/government-gives-cabinet-rank-extension-to-nripendra-misra-and-pk-mishra/articleshow/69745842.cms?from=mdr.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Laxmikanth, M. (2014). Governance in India (2nd ed.). நொய்டா: McGraw-Hill Education (published 25 ஆகஸ்ட் 2014). pp. 3.17–3.19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9339204785.
{{cite book}}
: Check date values in:|publication-date=
(help) - ↑ Bhattacharya, A. K. (15 April 2014). "A K Bhattacharya: The PMO and the PM". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (New Delhi: Business Standard Ltd). இணையக் கணினி நூலக மையம்:496280002. https://www.business-standard.com/article/opinion/a-k-bhattacharya-the-pmo-and-the-pm-114041501312_1.html.
- ↑ "A Principal Decline in South Block". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (Business Standard Ltd). 13 April 1998. இணையக் கணினி நூலக மையம்:496280002. https://www.business-standard.com/article/specials/a-principal-decline-in-south-block-198041301074_1.html.
ஆதாரங்கள்
தொகுநூற்கள்
தொகு- Mehta, Dalpat Singh (1968). Handbook of Public Relations in India. New Delhi: Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170233343.
- Laxmikanth, M. (2014). Governance in India (2nd ed.). Noida: McGraw-Hill Education (published 25 August 2014). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9339204785.
கட்டுரைகள்
தொகு- Singh, Karuna (July–September 2007). "Prime Minister's Office : A Critical Analysis". The Indian Journal of Political Science 68 (3): 629–640. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5510.