இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 368

இந்திய அரசியலமைப்பு பகுதி XX, பிரிவு 368[1], இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வரையறை செய்யும் பிரிவாகும். மேலும் இப்பிரிவு அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும், புதிதாக பகுதியை சேர்க்கவும் அல்லது இருக்கும் பகுதியை நீக்கவும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்தச் சட்டப் பிரிவு 368, நாடாளுமன்றத்திற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிகாட்டுகிறது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசு கொண்டு வ்ரும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத் தீர்மானம் வெற்றி பெற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சாதாரனமான (51%) பெரும்பான்மை வாக்குகள் பெற்றால் போதுமானது.

வரலாறு

தொகு
    • இத்தீர்ப்பினை முடக்க இந்திய அரசு 5 நவம்பர் 1971 அன்று நாடாளுமன்றம், 24-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம்[3], அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 13 மற்றும் 368 ஆகியவற்றில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இந்த திருத்தங்கள் வாயிலாக அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் திருத்துவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும் 1972-ஆம் ஆண்டு ஏப்ரலில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 31-இல் கொண்டு வரப்பட்ட 25-ஆவது திருத்தத்தின் மூலம் தனியார் நிலத்தையோ, அசையாத சொத்துகளையோ பொது நலனுக்காக அரசு கையகப்படுத்தும் போது இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்யும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.
  • 1973-இல் கேசவாந்த பாரதி வழக்கில்[4], இந்திய உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தாலும் கூட அவர்களால் எந்த எல்லைக்கு அப்பாற்பட்டு சட்டங்களை இயற்ற முடியாது எனத்தீர்ப்பு வழங்கியது.
    • இதன் எதிரொலியாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமையை மட்டும் நீக்கி, நாடாளுமன்றத்தில், 1976 ஆண்டில் 42-வது அரசிலமைப்பு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.[5]இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சொத்துரிமை அடிப்படை உரிமை அல்ல தீர்மானிக்கப்பட்டது. மேலும் பொதுநலக் காரணங்களுக்காக அரசு கையகப்படுத்தும் தனிநபர் சொத்துகளுக்கு போதிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Article 368 in The Constitution Of India 1949
  2. I.C. Golaknath and Ors. vs State of Punjab and Anrs.
  3. Twenty-fourth Amendment of the Constitution of India.
  4. Kesavananda Bharati v. State of Kerala.
  5. Forty-second Amendment of the Constitution of India.

வெளி இணைப்புகள்

தொகு