இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (3)
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (3), இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-ஐ பொது அறிவிப்பின் மூலம், குறிப்பிட்ட நாளிலிருந்து நீக்குவதற்கும், அதில் மாற்றங்கள் செய்வதற்கும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. .[1]
சட்டப்பிரிவு 370- குறித்து, குடியரசுத் தலைவர் பொது அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (2) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றத்தின்[2] ஒப்புதலை அவசியமாக பெற்றிருக்க வேண்டும்.[3]
குறிப்பு:சனவரி 1957-இல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் நிறுவப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றம் 26 சனவரி 1957 அன்று கலைக்கப்பட்டது. [4][5]எனவே ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் தானாகவே ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு கிடைத்துவிடுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Article 370 (3) in The Constitution Of India 1949
- ↑ "The Constitution of Jammu and Kashmir, 1956" (PDF). Archived from the original (PDF) on 2020-01-10. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13.
- ↑ Article 370(2) in The Constitution Of India 1949
- ↑ Forgotten day in Kashmir's history, Rediff.com, 2005-03-08
- ↑ A.G. Noorani (2014). Article 370: A Constitutional History of Jammu and Kashmir. Oxford University Press. pp. 9–11, Chapter 7 Doc #16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-908855-3.