இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருப்பதி

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருப்பதி (ஆங்கிலத்தில்: Indian Institute of Science Education and Research, Tirupati) ஒரு பொது ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம், திருப்பதியில் அமைக்கப்பெற்றுள்ளது. மனித வளமேம்பாடு அமைச்சால் நிறுவப்பட்டது. இஃது, உயர்நிலை அறிவியற் சார் கற்றல் மற்றும் ஆராய்ச்சி போன்றவற்றை ஊக்குவித்து, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் வழங்கி, உயர்தர அறிஞர்களையும் கல்வியாளர்களையும் உருவாக்கும் பொருட்டு அமைப்பெற்றுள்ளது.

Indian Institute of Science Education and Research Tirupati
குறிக்கோளுரைCreating Infinite possibilities
வகை
உருவாக்கம்2015
அமைவிடம், ,
வளாகம்Main – Spread over 250 ஏக்கர்கள் (1.0 km2) in Srinivasapuram mandal near திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், Temporary - Sree Rama Educational society, Tirupati
AcronymIISER Tirupati
இணையதளம்www.iisertirupati.ac.in

இந்நிறுவனம் இந்திய அரசால் நாட்டளவில் முதன்மை நிறுவனமாக அடையாளம் காண்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் செயல்படத்தொடங்கியது.

வரலாறு

தொகு

ஆந்திர பிரிவு மசோதாவின் ஒரு பகுதியாக இந்த நிறுவனம் ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டது. [1] மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி 28 மார்சு, 2015 அன்று இந்நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டினார். [2]

தொடக்கத்தில், இந்நிறுவனம் திருப்பதியிலுள்ள சிறி இராமா கல்வி சமுகவமைப்பில் தற்காலிக வளாகத்தில் பணிகளைத் தொடங்கியது. ஆந்திர மாநில அரசு நிரந்திர வளாகம் அமைக்க 250 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது, அதில் இன்னும் சில ஆண்டுகளில் கட்டமைப்பு முடித்துவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  1. "IIT, CU and IISER to be established in Tirupati - ANDHRA PRADESH - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-11.
  2. "Smriti Lays Stone for IIT, IISER, IIIT near Tirupati- The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-11.