இந்திய ஆற்றல் கொள்கை

இந்திய ஆற்றல் கொள்கை (energy policy of India) வளர்ந்துவரும் மின் பற்றாக்குறையை[3] எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று ஆற்றல் மூலங்களை வளர்க்கும் வகையிலும்[4] வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக அணு ஆற்றல், சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான முனைவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.[5]

காற்றுத்திறனால் 11800 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட இந்தியா உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது[1] தமிழ்நாடு கயத்தாறில் உள்ள ஓர் காற்றுப் பண்ணை.
நிலக்கரி இருப்பில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]சார்க்கண்டில் உள்ளதொரு நிலக்கரிச் சுரங்கம்.

இந்தியாவின் மின்சார உற்பத்தியில் ஏறத்தாழ 70% புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பெறப்படுகிறது; இதில் நிலக்கரி 40% ஆக முன்னிலையிலும் அடுத்ததாக பாறை எண்ணெய் 24%ஆகவும் இயற்கை எரிவளி 6% ஆகவும் உள்ளன.[3] பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே நம்பியுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆற்றல் நுகர்வில் 53%க்கும் கூடுதலாக இறக்குமதியை நாடியிருக்க வேண்டி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.[3] 2009-10இல் 159.26 மில்லியன் டன் பாறை எண்ணெயை இறக்குமதி செய்தது; இது உள்நாட்டு பாறை எண்ணெய்ப் பயன்பாட்டில் 80% ஆகும். மேலும் நாட்டின் மொத்த இறக்குமதிகளில் 31% எண்ணெய் இறக்குமதியாகும்.[3][6] இந்தியாவின் மின்சார உற்பத்தியின் வளர்ச்சி உள்நாட்டு நிலக்கரித் தட்டுப்பாட்டால் தடைபட்டுள்ளது.[7] இதனால் 2010இல் மின் உற்பத்திக்கான இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 18%ஆக உயர்ந்துள்ளது.[8]

விரைவாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் மின்தேவையை சந்திக்க ஆற்றல் துறையில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உலகளாவிய ஆற்றல் தேவையில் இரண்டாம் பெரும் சந்தையாக உள்ளது. உலகளாவிய மின் உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 18%ஆக உள்ளது.[5] வளர்கின்ற மின்தேவையையும் புதைபடிவ எரிமங்களின் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு மின் நிலையங்களில் தனது குவியத்தை செலுத்தி உள்ளது. காற்றுத் திறன் சந்தையில் உலகின் ஐந்தாமிடத்தில் உள்ளது.[9] 2022இல் 20 கிலோவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.[5] இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு மின்நிலையங்களின் பங்கை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் தற்போதைய 4.2%இலிருந்து 9%ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.[10] நாட்டில் ஐந்து அணு மின் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.2025க்குள் மேலும் 18 அணு மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.[11]

இந்தியாவில் ஆற்றல் வளங்கள் தொகு

மொத்த நிறுவப்பட்ட திறனளவு (சூன் 2015)[12]

வளம் மொத்த திறனளவு (MW) விழுக்காடு
நிலக்கரி 164,635.88 61.51
புனல் மின்சாரம் 41,267.43 15.42
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 31,692.14 12.70
எரிவளி 23,062.15 8.61
அணு 5,780.00 2.16
எண்ணெய் 1,199.75 0.44
மொத்தம் 267,637.35
துறை மொத்த திறனளவு (MW) விழுக்காடு
மாநில அரசுத்துறை 96,963.20 36.23
நடுவண் அரசுத் துறை 72,521.16 27.10
தனியார் துறை 98152.99 36.67
மொத்தம் 267,637.35 .

சான்றுகோள்கள் தொகு

  1. "State-wise Installations Statistics". Wind Power India. 2010-03-31. Archived from the original on 2010-04-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-27.
  2. Deepak Fertilizers signs JV with Norway major
  3. 3.0 3.1 3.2 3.3 India’s Widening Energy Deficit
  4. “Energy resources in India”
  5. 5.0 5.1 5.2 India Raises Renewable Energy Target Fourfold
  6. India Energy Profile – EIA
  7. India Electricity Output Misses Target
  8. Indian Power Plants Boost Coal Imports 18%, Market Watch Says
  9. Wind energy in India: Chinese company sold 125 wind turbines of 2 MW
  10. "Slowdown not to affect India's nuclear plans". Business-standard.com. 2009-01-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  11. Going nuclear, The Economist
  12. ""Total installed capacity in India" (PDF). CEA, India. Archived from the original (PDF) on 14 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஆற்றல்_கொள்கை&oldid=3791502" இலிருந்து மீள்விக்கப்பட்டது