இந்திய செய்தித்தாள் சங்கம்
இந்திய செய்தித்தாட்களின் சங்கம் (The Indian Newspaper Society)[2] இந்தியாவில் உள்ள அச்சு ஊடகங்களான நாளிதழ்கள், பருவ இதழ்கள் ஆகியவற்றின் மத்திய அமைப்பாக செயல்படுகிறது. இலாப நோக்கமற்ற அமைப்பான இது இந்திய செய்திதாட்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே இதன் முதன்மைப் பணியாகும். இதன் உறுப்பினர்கள் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்கள் ஆவார்.
இலச்சினை , இந்தியச் செய்தித்தாள் சங்கம் | |
சுருக்கம் | INS |
---|---|
உருவாக்கம் | 27 பெப்ரவரி 1939[1] |
வகை | நலச்சங்கம் |
சட்ட நிலை | லாப நோக்கமற்றது[2] |
நோக்கம் | இந்திய செய்திதாட்களின் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது |
தலைமையகம் | ரபி மார்க், புது தில்லி |
சேவை பகுதி | இந்தியா |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | ராகேஷ் சர்மா (2023-2024) |
மைய அமைப்பு | நிர்வாகக் குழு |
சார்புகள் | உலகச் செய்திதாட்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களின் சங்மம் [3] |
வலைத்தளம் | https://www.indiannewspapersociety.in/ |
இச்சங்கம் 1939ம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இவ்வமைப்பிற்கு 2023-2024 காலத்திற்கான தலைவராக ஆஜ் சமாஜ் செய்தித்தாள் உரிமையாளரான ராகேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[4]
சங்கத்தின் நோக்கங்கள்
தொகு- செய்தித்தாட்கள் மற்றும் பருவ இதழ்களின் வணிக நலன்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
- உறுப்பினர்களுக்கு அனைத்து தலைப்புகள் பற்றிய தகவலைச் சேகரித்து தெரிவித்தல்
- உறுப்பினர்களின் பொதுவான வணிக நலன்களைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "History of Indian Newspaper Society (INS)". indiannewspapersociety.org. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
- ↑ 2.0 2.1 "THE INDIAN NEWSPAPER SOCIETY". OpenCorporates. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
- ↑ "List of members". wan-ifra.org (in ஆங்கிலம்). 23 February 2015. Archived from the original on 23 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ஐ.என்.எஸ்., தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு