இந்திய தேசியக்கொடி சட்டம்
இந்திய தேசியக்கொடி சட்டம் என்பது இந்திய தேசியக்கொடியின் உபயோகம் குறித்து இயற்றப்பட்ட பல்வேறு விதிகளின் தொகுப்பாகும்.
வரலாறு
தொகுதேசியக்கொடியை தயாரிக்கும்பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இந்திய தர நிர்ணய கூட்டமைப்பு வலிந்து செயற்படுத்தும் பொறுப்பை பெற்றுள்ளது. இச்சட்டததை மீறுபவர்கள் மிக கடுமையான தண்டனைகளையும், அபராதங்களையும் சந்திக்க நேரிடும். 2002ம் ஆண்டு எழுதப்பட்ட இச்சட்டத்துடன் இந்திய முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்கமுறை) சட்டம் 1950 மற்றும் தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச்சட்டம்,1971 ஆகிய சட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டது. இச்சட்டத்திற்கு முன் அமலிலிருந்த இந்திய கொடி விதி மிகவும் இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும். குடிமக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக்கொடியை ஏற்ற அனுமதிக்காத காரணத்தினாலும் மிகவும் விமர்சிக்கப்பட்டது. ( அரசு அமைப்புகளும், அரசு அலுவலகங்கள் மட்டுமே கொடியை பறக்கவிட அனுமதிக்கப்பட்டிருந்தது).
2002ல் வடநாட்டு தொழிழதிபரும், அரசியல்வாதியுமான நவீண் ஜிண்டாலால் தொடரப்பட்ட ஒரு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்தியர் அனைவரும் அவரவர் இல்லங்களில் இந்தியக்கொடியை உயர பறக்கவிடும் உரிமையை வழங்கியது. 2005ல் இச்சட்டம் திருத்தப்பட்டு இந்திய தேசியக்கொடி இடுப்பிற்கு கீழ் அணியக்கூடாது போன்ற சில விதிகள் எழுதப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இதில் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதித்தது.
வரையறுக்கப்பட்ட கொடி தயாரிப்பு முறை
தொகுஅளவு | மி.மீ |
---|---|
1 | 6300 × 4200 |
2 | 3600 × 2400 |
3 | 2700 × 1800 |
4 | 1800 × 1200 |
5 | 1350 × 900 |
6 | 900 × 600 |
7 | 450 × 300 |
8 | 225 × 150 |
9 | 150 × 100 |
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் இந்திய தர நிர்ணய கூட்டமைப்பினால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இநத அளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இநத அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு,அடர்த்தி, பளபளப்பு, துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, காதி என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.
காதி சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும். இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.