இந்திய தேசிய இராணுவக் கல்லூரி
இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி (Rashtriya Indian Military College (RIMC)[1] இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனின் செயல்படும் ஆண் பையன்களுக்கான இராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகும். இது பிரித்தானிய இந்திய அரசால் நிறுவப்பட்டதாகும்.[2]
RIMC | |
---|---|
அமைவிடம் | |
தேராதூன், உத்தராகண்ட் இந்தியா | |
தகவல் | |
வகை | இராணுவப் பயிற்சிக் கல்லூரி இந்திய அரசால் இயங்குகிறது. |
குறிக்கோள் | Bal Vivek (Strength and Conscience) |
தொடக்கம் | 1922 |
நிறுவனர் | வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு |
தரங்கள் | வகுப்புகள் 8–12 |
பால் | ஆண் |
வயது | 12 to 18 |
மொத்த சேர்க்கை | 250 |
Campus size | 138-ஏக்கர் (0.56 km2) |
நிறங்கள் | இளம் நீலம் மற்றும் அடர் நீலம் |
முன்னாள் மாணவர்கள் | ஜெனரல் கே. எஸ். திம்மையா |
வகுப்புகள் | பிரதாப், இரஞ்சித், சிவாஜி மற்றும் சந்திரகுப்தா |
இணையம் | http://rimc.gov.in/rimcindex.aspx |
ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் இளவரசர் எட்டாம் எட்வர்டு, இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியை 1922-இல் துவக்கி வைத்தார். இதனை இந்திய அரசு நடத்துகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் சேர 11.5 வயது நிறைவடைந்த ஆண் பையன்களை, ஆண்டுதோறும் இருமுறை, நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். இக்கல்லூரியில் 8 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை இராணுவப் பயிற்சியையும் வழங்குகிறது. இக்கல்லூரியில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள் ஜெனரல் கே. எஸ். திம்மையா மற்றும் அக்சர் கான் போன்றவர்கள் ஆவார்.[1]
நுழைவுத் தேர்வு
தொகுஆறு மாதத்திற்கு ஒரு முறை 25 ஆண் மாணவர்களை மட்டும் எட்டாம் வகுப்பிற்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.[3] வகுப்பு துவங்கும் போது மாணவர்களின் வயது 11.5 முதல் 13-க்குள் இருத்தல் வேண்டும். நுழைவுத் தேர்வில் ஆங்கிலம் (125 மதிப்பெண்), கணக்கு (200) மற்றும் பொது அறிவு (75) என மூன்று பாடங்கள் கொண்டிருக்கும். மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வு (Viva-Voce) 50 மதிப்பெண்கள் கொண்டிருக்கும். மாநிலத் தலைநகரங்களில் மட்டும் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் உடல் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும்.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pages 22 and 23, Where Gallantry is Tradition: Saga of Rashtriya Indian Military College, By Bikram Singh, Sidharth Mishra, Contributor Rashtriya Indian Military College, Published 1997 by Allied Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7023-649-5
- ↑ "www.euttaranchal.com". www.euttaranchal.com. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
- ↑ ADMISSION PROCEDURE
- ↑ "Official website". Rimc.org. Archived from the original on 2011-02-27. பார்க்கப்பட்ட நாள் 2011-02-11.
வெளி இணைப்புகள்
தொகு- கல்லூரியின் இணையத்தளம்
- சேர்க்கை முறைகள் பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்
- முன்னாள் மாணவர்கள் பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம்